Back to Top

கல்வி அமைச்சுடன் இணைந்து ஆறாவது ஆண்டாகவும் “ரண் தரு திலின” திட்டத்தை Brandix முன்னெடுப்பு

கல்வி அமைச்சுடன் இணைந்து ஆறாவது ஆண்டாகவும் “ரண் தரு திலின” திட்டத்தை Brandix முன்னெடுப்பு

January 13, 2022  01:39 pm

Bookmark and Share
Brandix அப்பரல் லிமிடெட் தனது வருடாந்த “ரண் தரு திலின” நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ச்சியான ஆறாவது ஆண்டாகவும் முன்னெடுத்திருந்தது. Brandix ஊழியர்களின் 8354 பிள்ளைகளுக்கு பாடசாலை பொதிகள் மற்றும் காகிதாதிகள் போன்றவற்றை புதிய பாடசாலை ஆண்டுக்காக வழங்க முன்வந்திருந்தது. இந்த ஆண்டின் நிகழ்ச்சித் திட்டம் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இதில் Brandix, முதலீட்டு சபை மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். ரண் தரு திலின 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, 37000 க்கும் அதிகமான சிறுவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான திட்டத்தினூடாக சமூகத்தைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு காகிதாதிகள் பொதிகளை வழங்கியிருந்ததுடன், எதிர்காலத் தலைவர்களுக்கு கல்வியை பெற்றுக் கொடுப்பதற்காக மனுசத்கார சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தை குழுமம் முதன் முறையாக நீடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ரண் தரு திலின தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “பிள்ளைகளின் கல்வி என்பது இலவச கல்வியினூடாகவும், பாடசாலைகளை நிர்மாணிப்பதனூடாகவும் மாத்திரம் உறுதி செய்யப்படுவதில்லை. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தார் எனும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து, புதிய தலைமுறையினரிடையே கல்வி மற்றும் பயிலல் தொடர்பான பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதுடன், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய புதிய தலைமுறையை கட்டியெழுப்ப முன்வரவேண்டும். நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அறிவு என்பது உங்கள் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்திருப்பதுடன், உங்களுடன் எந்நாளும் நிலைத்திருக்கும். எனவே, பிள்ளைக்கு பெற்றோரால் வழங்கக்கூடிய சிறந்த அன்பளிப்பு கல்வியை தொடர்வதற்கான ஆதரவளிப்பதாகும். இதனை Brandix நன்கு புரிந்து கொண்டுள்ளது. சிறுவர்களின் கல்வியை தொடர்வதற்கு இது போன்ற அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளை முன்னெடுக்கின்றமைக்காக கல்வி அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் சார்பாக நிறுவனத்துக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.

Brandix இன் மனுசத்கார சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ரண் தரு திலின ஊடாக முன்பள்ளி முதல் தரம் 5 வரையில் கல்வி பயிலும் Brandix ஊழியர்களின் பிள்ளைகளின் வாழ்வுக்கு வளமூட்டும் பணிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தரம் 3 முதல் 5 வரையான பிள்ளைகளுக்கு பாடசாலைப் பைகள், அப்பியாசக் கொப்பிகள், வரைதல் கொப்பிகள் மற்றும் இதர அத்தியாவசிய காகிதாதிகள் போன்றன அன்பளிப்பு செய்யப்பட்டிருந்ததுடன், சிறு பிள்ளைகளுக்கு பாடசாலை பைகள், கிளே வகைகள், கத்தரிக்கோல் மற்றும் கிரேயோன்கள் போன்றன வழங்கப்பட்டன.

Brandix இன் சமூகப் பொறுப்புணர்வு பிரிவின் தலைமை அதிகாரி மாலிக சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், “எமது சமூகப் பொறுப்புணர்வு தந்திரோபாயத்தில் கல்வியில் நாம் அதிகளவு கவனம் செலுத்துகின்றோம். Brandix இல் எமது ஊழியர்களின் நலனில் அக்கறை காண்பிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே ரண் தரு திலின என்பது எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இதனூடாக எமது ஊழியர்களின் சுமை ஒன்று நீக்கப்பட்டுள்ளது. ரண் தரு திலின திட்டத்தை பல மாணவர்களுக்கு விஸ்தரிப்பு செய்வதில் நிறுவனம் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இந்த ஆண்டில் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த எமது தொழிற்சாலையை அண்மித்து வாழும் பிள்ளைகளையும் உள்வாங்க நாம் தீர்மானித்தோம். இந்தத் திட்டத்தை ஏனைய பகுதிகளுக்கும் படிப்படியாக விஸ்தரிக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

ரண் தரு திலின திட்டத்துக்கு மேலதிகமாக, Brandix இனால் “ரண் தரு புலமைப்பரிசில்” திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. தரம் 5, க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகியவற்றில் பயிலும் சிறுவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கும் திட்டமாக அமைந்துள்ளது. அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு உயர் கல்வியை எவ்வித தடைகளுமின்றி தொடர்வதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட “ரண் தரு அபிசேஸ்” திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.

“புத்துணர்வான தீர்வுகளை வழங்கும் புத்துணர்வான நாம்” எனும் தொனிப்பொருளுக்கமைய இயங்கும் இலங்கையின் ஆடை தொழிற்துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனமாக Brandix திகழ்கின்றது. உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களுக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஆடை உற்பத்திகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளதுடன், ஒன்பது நாடுகளில் 60,000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது. பிராந்தியத்தின் நிலைபேறான ஆடை உற்பத்தியாளராகத் திகழும் பயணத்தை முன்னெடுக்கும் Brandix, தனது சகல செயற்பாடுகளிலும் மற்றும் சகல பங்காளர்களிலும் மாற்றத்தை ஊக்குவிக்க எதிர்பார்க்கின்றது. Brandix பற்றி மேலும் அறிந்து கொள்ள www.brandix.com எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.