
சிம்பாப்வே அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
January 21, 2022 06:23 pm
இலங்கை மற்றும் சுற்றுலா சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களையும், சரித் அசலங்க 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
அதனடிப்படையில் சிம்பாப்வே அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டித் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுள்ளன.
இதற்கமைய, இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி தொடரை கைப்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.