Back to Top

 கலா பொல ஆன்லைன் ஊடாக உள்ளூர் கலைஞர்களுக்கு தொடர்ந்து வலுவூட்டி வருகின்றன

கலா பொல ஆன்லைன் ஊடாக உள்ளூர் கலைஞர்களுக்கு தொடர்ந்து வலுவூட்டி வருகின்றன

January 25, 2022  11:05 am

Bookmark and Share
2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸுக்கு முன்னதாக, நவம்பர் 28 முதல் டிசம்பர் 28 வரை ஒரு மாத கால நிகழ்வாக இரண்டாவது முறையாக கலா பொலா ஆன்லைனில் நடைபெற்றது. ´கலா போல ஆன்லைன் கிறிஸ்துமஸ் பதிப்பு´ என்ற தலைப்பில், இந்த நிகழ்வை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை அதன் டிஜிட்டல் காட்சியகமான www.srilankanartgallery.com இல் நடத்தியது. இது ஆண்டு முழுவதும் கலைஞர்களுக்கான வெளிப்படுத்துதல் மற்றும் நிலையான சந்தை இணைப்புகளை வழங்குகிறது.

ஜோர்ஜ் கீட் அறக்கட்டளை மூலம் கருத்தாக்கம் செய்யப்பட்டு திறந்த வெளி கலை கண்காட்சியாக ஆரம்பிக்கப்பட்ட கலா பொல நிகழ்விற்கு அதன் அனுசரணையாளராகவும் முகாமையாளராகவும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியுடன் 27 வருட கூட்டாண்மையை அனுபவித்து வருகிறது. கலா பொல என்பது ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் கலை மற்றும் கலாச்சாரத்தில் கவனம் செலுத்தும் பகுதியின் கீழ் ஒரு முதன்மையான திட்டமாகும், இது இலங்கையின் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட ஒரு நிலையான கூட்டாண்மை சமூக பொறுப்புக்கான (சிஎஸ்ஆர்) முன்முயற்சியாக இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் பரந்த பார்வையாளர்களிடையே கலைகளின் பாராட்டு மற்றும் ஆதரவை ஊக்குவிக்கிறது.

கோவிட் - 19 தொற்றுநோய் காரணமாக, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு 2021 பெப்ரவரி / மார்ச் மாதங்களில் கலா பொல முதன்முதலாக ஆன்லைனில் நடைபெற்றது, அதன் வெற்றியைத் தொடர்ந்து நவம்பர் / டிசம்பர் மாதங்களில் கிறிஸ்துமஸ் பதிப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 273 கலைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று 5,034 கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர், 64,700 தனித்துவ பார்வையாளர்களை ஈர்த்து, 422 கலைப் படைப்புகள் மற்றும் 12.6 மில்லியன் ரூபாய்கள் விற்பனை வருவாயில் 63க்கும் மேற்பட்ட படைப்புகள் விற்பனை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டது. இது தொற்றுநோய் வரம்புகளை மிஞ்சிய கலை மீதான எப்போதும் அதிகரித்து வரும் ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும். இந்த மெய்நிகர் நிகழ்வு இரண்டு பக்க நிகழ்வுகளை கொண்டிருந்தது. அருண் டயஸ் பண்டாரநாயக்க தொகுத்து வழங்கிய இலங்கை கலைஞர்களான பாலா பொதுப்பிட்டியே, அனோலி பெரேரா மற்றும் சஞ்சீவி செனவிரத்னா ஆகியோரின் ´ஸ்பாட்லைட் ஆன் ஆர்ட்டிஸ்ட்´ தொடர் மற்றும் ஷியாமலா கலைப் பள்ளியால் நடத்தப்பட்ட குழந்தைகள் கிறிஸ்துமஸ் பட்டறை என்பவையாகும்.

´இலங்கையின் கலைஞர்கள் தொற்றுநோயால் தொடர்ந்து சவாலுக்கு ஆளாகி வரும் இந்த நேரத்தில், கலா பொல கிறிஸ்துமஸ் பதிப்பிற்கு கலைஞர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் கிடைத்த அளப்பரிய வரவேற்பையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்´ என்று ஜோன் கீல்ஸின் சிஎஸ்ஆர் இன் தலைவர் கார்மெலின் ஜெயசூரிய தெரிவித்தார்.

´ஜோன் கீல்ஸ ; குழுவானது, எங்களது பங்குதார நிறுவனங்களுடன் இணைந்து, குழுவின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான பரந்த இலக்கை அடைவதற்கான திட்டத்திற்கு எங்களது பல்வேறு முயற்சிகள் மூலம் இலங்கையின் கலை மற்றும் கலைஞர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது.´ நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (NTB) - தனியார் வங்கியானது தொடர்ந்து இரண்டாவது முறையாக கலா பொல ஆன்லைனின் வங்கிப் பங்குதாரராக இருந்தது, பொது வெளியீட்டிற்கு முன்னதாக அதன் தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக மெய்நிகர் முதல் காட்சியை செயல்படுத்தியது. என்டிபி இன் கூட்டாண்மை ஃபிரிமீ (FriMi) மூலம் லங்காக்யூஆர் (LankaQR) குறியீட்டு கட்டண விருப்பத்தை உள்ளடக்குவதுடன் கொள்முதல் செய்பசவர்களுடன் பதிவுசெய்யப்பட்ட கலைஞர்களுக்கான சந்தை அணுகலை மேம்படுத்துகிறது.

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் ஆறு மையப் பகுதிகளில் கலை மற்றும் கலாச்சாரம் ஒன்றாகும் - கொழும்பு பங்குச் சந்தையில் இலங்கையின் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சியின் (ஜே.கே.எச ;) சி.எஸ்.ஆர் நிறுவனம் 7 வௌ்வேறு தொழில் துறைகளில் உள்ள 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் எல்எம்டி இதழால் கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையின் ´மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்´ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. குளோபல் காம்பாக்ட்டின் பங்கேற்பாளராகவும் இருக்கும் ஜே.கே.எச் தனது சமூக பொறுப்புணர்வு பார்வையை ´ நாளைய தேசத்தை வலுப்படுத்துவோம்´ என்ற ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், சமூக தொழில்முனைவோர் முயற்சியாக இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் வினையூக்கியான ´பிளாஸ்டிக்சைக்கிள்´ மூலமாகவும் இயக்குகிறது.