Back to Top

LINDEL நிறுவனம்  காணி மற்றும் ஆதனத் துறையில் வெண்கல விருதை வென்றுள்ளது

LINDEL நிறுவனம் காணி மற்றும் ஆதனத் துறையில் வெண்கல விருதை வென்றுள்ளது

January 25, 2022  11:16 am

Bookmark and Share
DFCC குழுமத்தின் துணை நிறுவனமான Lanka Industrial Estates Ltd (LINDEL), “மீண்டு எழுவதிலிருந்து வளர்ச்சி காணுதல்” என்ற தொனிப்பொருளுடன் வெளியிட்ட 2020/21 நிதியாண்டிற்கான அதனது ஆண்டறிக்கைக்காக, இலங்கை பட்டயக் கணக்காளர்கள் கற்கை நிலையம் ஏற்பாடு செய்திருந்த 56 ஆவது ஆண்டறிக்கை விருதுகளில் ‘காணி மற்றும் ஆதனம்’ என்ற துறையில், ‘வெண்கல விருதை’ அண்மையில் வென்றுள்ளது.

பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள பல நிறுவனங்களை உள்ளடக்கிய இப்பிரிவில் LINDEL மட்டுமே பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்படாத ஒரு நிறுவனமாகப் போட்டியிட்டது. மேலும் போட்டியின் முதல் ஆண்டிலேயே இந்த விருதைத் தனதாக்கியுள்ளதுடன், இது நிறுவனம் மற்றும் ஒட்டுமொத்த DFCC குழுமத்திற்கும் குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாக மாறியுள்ளது.

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் கற்கை நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருமதிப்புமிக்க ஆண்டறிக்கை விருதுகள் நிகழ்வானது 2021 டிசம்பர் 9 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 55 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட இந்தப் போட்டியானது, கடுமையான மூன்று அடுக்கு மதிப்பீட்டு நடைமுறைக்கு உட்பட்டது. இங்கு ஆண்டறிக்கைகள் மூன்று கட்டங்களாக மதிப்பீடு செய்யப்படுகின்றன. முதலில் ஒரு தொழில்நுட்பக் குழுவும், பின்னர் தொழில்துறை வல்லுநர்கள் குழு ஒன்றும் மற்றும் அதன் பின்னர், ஒரு சிறந்த கணக்காளர், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் கல்விமான்களை உள்ளடக்கிய நடுவர் குழுவால் இந்த மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தச் சாதனை குறித்து LINDEL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரசிக கூரே அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “போட்டியில் நாங்கள் பங்குகொண்ட முதல் வருடத்திலேயே வெண்கல விருதை வென்றதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இது எங்கள் வலுவான செயல்திறன் மற்றும் ஆண்டறிக்கை வெளியீட்டுக் கட்டமைப்பிற்கு இணங்குவதை பிரதிபலிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் வலுவான கட்டமைப்புகள், செயல்முறைகள், ஒழுக்கமான பணியாளர்கள், பணிப்பாளர் சபைத் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் DFCC வங்கியின் பக்கபலம் ஆகியவை எங்களின் மீண்டெழும் திறனை கணிசமாக அதிகரித்துள்ளதுடன், சவாலான சூழலுக்கு மத்தியிலும் அதிக வருவாயைப் பதிவு செய்ய இடமளித்துள்ளன. நிறுவனத்தின் செயல்திறன் வரையறைகளை மேலும் உந்தித் தள்ளும் அதே வேளையில், தொடர்புபட்ட அனைத்து தரப்பினருடனும் நாங்கள் தொடர்புகொள்வதையும், சிறப்பான முறையில் ஈடுபாடுகளையும் உறுதிசெய்து, உயர்மட்ட பொறுப்புணர்வையும், வெளிப்படுத்துதலையும் வெளிப்படுத்தும் எங்களின் மூலோபாயத்திற்கு இந்த அறிக்கையிடல் சிறந்த சான்றாக அமைந்துள்ளது. சவாலான ஆண்டில் தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்கி, இந்த விருதைப் பெற்றுக்கொள்ளும் பாதையில் எம்மை வழிநடத்திய முகாமைத்துவ அங்கத்தினர், பணிப்பாளர் சபைத் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் ஆகிய அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்,” என்று குறிப்பிட்டார்.

LINDEL நிறுவனம் தொடர்பான விபரங்கள்

Lanka Industrial Estates Ltd (LINDEL) நிறுவனமானது DFCC வங்கியின் ஒரு துணை நிறுவனமாகும். சபுகஸ்கந்தவில் உள்ள அரச உர உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தளத்தை ஒரு கைத்தொழில் பேட்டையாக அபிவிருத்தி செய்வதற்காக DFCC வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையிலான கூட்டணியாக இது 1992 இல் கூட்டிணைப்புச் செய்யப்பட்டது. அந்தவகையில், LINDEL என்பது இலங்கையின் முதலாவது தனியார் துறைக்குச் சொந்தமான தொழில்துறை கைத்தொழில் பேட்டை அபிவிருத்தியாளர் மற்றும் செயற்பாட்டாளர் ஆகும். தற்போது 105 ஏக்கர் பரப்பளவில் சபுகஸ்கந்தவில் உள்ள இடம், விவசாயம், இரசாயனங்கள், விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் உற்பத்திகள், ஏற்றுமதி, இறக்குமதி போக்குவரத்து, மசகு எண்ணெய்கள், உலோகத் தயாரிப்பு, பொதியிடல் மற்றும் மின் உற்பத்தி போன்ற பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டுள்ள 36 குத்தகைதாரர்களால் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. LINDEL அதன் அனைத்து குத்தகைதாரர்களுக்கும் முழுமையான உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகளை வழங்குகிறது. அத்துடன் அதன் அனைத்து சேவைகளின் பேணல் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தலில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.