Back to Top

Brantel நிறுவனமானது Oukitel மற்றும் Blackview Smart Phone களின் இலங்கை விநியோகஸ்தராக நியமனம்

Brantel நிறுவனமானது Oukitel மற்றும் Blackview Smart Phone களின் இலங்கை விநியோகஸ்தராக நியமனம்

January 25, 2022  04:31 pm

Bookmark and Share
இலங்கையில் E-tel கையடக்கத் தொலைபேசிகளின் வணிக நாமத்தைக் கட்டியெழுப்பிய Brantel நிறுவனம் ஐரோப்பாவின் முக்கியமான இடங்களை உள்ளடங்கிய உலகம் முழுவதுமான 80 நாடுகளில் பாவனைக்குப் பிரபலமான மேலும் இரண்டு Smart phone களின் விநியோகஸ்தத்தைத் தனதாக்கியுள்ளது.

சீன உற்பத்திகளான “Oukitel” மற்றும் “Blackview” Smart phone களின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக நியமனம் பெற்றதுடன் Brantel நிறுவனமானது நீடித்த பாவனை அதிசிறந்த Battery பாவனை உயர்வான கொள்ளவுடைய Random Access Memory (RAM) மற்றும் Read Only Memory (ROM), சிறப்பான கமெரா மற்றும் உயிரியல் முறையிலான உறுதிப்படுத்தல் உட்பட்ட புத்தம்புதிய அம்சங்களுடன் கூடிய உத்தரவாதத்துடனான கையடக்கத் தொலைபேசிளை சந்தைப்படுத்த முதலில் தெரிவுசெய்யவுள்ளது.

இந்த இரண்டு தயாரிப்புக்களுடன் சிறப்பம்சங்கள் மற்றும் செயலாற்றல் ஆகியவற்றில் சந்தையிலுள்ள புத்தம்புதிய Smart phone களுக்கு நிகராகவும் ஆனால் உலகளவில் முன்னணி தயாரிப்பு நாமங்களின் விலைப்பட்டியலைவிட குறைந்த விலையில் வழங்கிவரும் தமது மூலோபாயங்களை Brantel தொடரவுள்ளது.

Oukitel தயாரிப்பு வடிவங்களில் Brantel, உச்சபட்ச இயக்கு சக்தியை வழங்கக்கூடிய P60 octa-core processor இனால் இயங்குவதும் அதியுயர் தரமான Selfie எடுக்க உதவும் தன்னிகரற்ற 20 MP கொண்ட தரமான கமெராவுக்காக அறியப்படுவதுமான C21 ஐ வழங்குகிறது. மற்றொன்று பிரகாசமான வர்ணங்களுடனும் 6.49 அங்குல அதிதுல்லியமான HD+ தரத்துக்கு மேலதிகமாக ஈர்ப்பினை ஏற்படுத்தும் கணினி வலுவுடனும் வரும் ஆரம்பநிலை Oukitel C19. Blackview விடமிருந்து நிறுவனமானது பலவித வர்ணங்களிலும் quad கமெராவுடன் வரும் octa-core 4G நவநாகரிக Smart phone ஆன Blackview A90, “Budget king” Blackview A80 Plus ஆகியவற்றை வழங்குகிறது. இவ் Smart phone களை Brantel காட்சியறைகளிலும் www.brantelonline.com க்கு விஜயம் செய்யவதன் மூலமாகவும் அல்லது நாடு முழுவதும் உள்ள விற்பனையாளரிடமும் கொள்வனவு செய்துகொள்ளலாம். இணையவழி வாடிக்கையாளர் 15% வரையிலான விசேட விலைக்கழிவுகளை பெற்றுக்கொள்வதோடு நாடு முழுவதுமான விநியோக வசதிகள் வழங்குவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2007இல் ஸ்தாபிக்கப்பட்ட Oukitel, முன்னேற்றகரமானதும் அனுபவம்வாய்ந்ததுமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி குழாம் அர்ப்பணிப்புடைய தயாரிப்பு அணி மற்றும் தொழிநுட்ப சேவைகளை உள்ளடக்கிய சீனாவிலுள்ள தேசிய நவீன தொழிநுட்ப நிறுவனம் ஒன்றினால் உரிமைகொள்ளப்படுகிறது.

Oukitel ஐரோப்பா ஆசியா வட தென் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் தன் இருப்பை உறுதிப்படுத்தியிருப்பதுடன் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 130 விநியோகஸ்தர்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

Blackview சீனாவில் 8,500 சதுரமீட்டர் பரப்பளவில் தொழிற்சாலையைக் கொண்டிருப்பதோடு ரஷ்யா ஸ்பெய்ன் ஜெர்மனி செக் குடியரசு உக்ரேய்ன் பிரான்ஸ் இத்தாலி துருக்கி அல்ஜீரியா கொலம்பியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 80 நாடுகளில் 100க்கு மேற்பட்ட அங்கீகாரமளிக்கப்பட்ட முகவர்களுடன் தனது வாடிக்கையாளர் பரம்பலைக் கொண்டுள்ளது. வரையறுக்கப்பட்ட டீசயவெநட டுயமெய நிறுவனம் 2000 க்கும் மேற்பட்ட வர்த்தக வாடிக்கையாளருக்கு தொழிநுட்ப மற்றும் தரம்வாய்ந்த பல சேவைகளை வழங்கி வருகின்றது. இந்நிறுவனமானது உலகம் முழுவதும் உள்ள முன்னணி தொழிநுட்ப தயாரிப்பு நாமங்களோடு இணைந்து விற்பனை வழிமுறைகளை எளிதாக்குவதுடன் விரைவுபடுத்துகிறது. நிபுணத்துவம் வாய்ந்த விற்பனை மற்றும் தொழிநுட்ப உதவி குழுக்களுடன் அது நாடு முழுவதும் உள்ள கிளைகள் மற்றும் விற்பனையாளர் மூலமாக கடந்த 18 வருடங்களாக வாடிக்கையாளருக்கு சேவையாற்றி வருகின்றது.

Copper மற்றும் Fiber வலையமைப்பு கேபிள்கள் Passive வலையமைப்பு பாகங்கள் சூரியசக்தி அலைமின்மாற்றிகள் PV மொடியூல்கள் Point-of-sale thermal printers மற்றும் டிஜிட்டல் ஸ்மார்ட் போர்ட்கள் உட்பட்ட இவ்வாறான முன்னணி உலக தயாரிப்புக்களை Brantel வழங்கிவருகின்றது. Brantel நிறுவனமானது E-tel mini கணினிகள் Android Smart Phone கள் Tablets, Feature Phone கள் மற்றும் Corning தயாரிப்புக்களுக்கான இலங்கையின் தேசிய விநியோகஸ்தராக இருக்கிறது.