
மஹிந்திரா ஐடியல் ஃபினான்ஸ் குளியாப்பிட்டியில் 20 ஆவது கிளையை திறந்து வைத்து தனது வலையமைப்பை மேலும் விஸ்தரித்துள்ளது
May 5, 2022 05:18 pm
முதன்மையான, உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா ஐடியல் ஃபினான்ஸ், கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற நுகர்வோரை மையமாகக் கொண்டு இயங்கி வருவதுடன், அதன் நாடு தழுவிய வலையமைப்பு விஸ்தரிப்பின் கீழ் இலங்கையில் தனது 20 ஆவது
கிளையை அண்மையில் குளியாப்பிட்டியில் திறந்து வைத்துள்ளது. வட மேல் மாகாணத்திலுள்ள
கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற மக்களுக்கான ஒரு முக்கியமான வணிக மையமான
குளியாப்பிட்டியில் அமைந்துள்ள இந்த புதிய கிளையானது, நாடு முழுவதும் மஹிந்திரா ஐடியல்
ஃபினான்ஸின் வளர்ந்து வரும் பிரசன்னத்தை வலுப்படுத்தும் அதே நேரத்தில்
வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சௌகரியத்தையும், பெற்றுக்கொள்வதற்கான
வாய்ப்பினையும் வழங்குகிறது.
மஹிந்திரா ஐடியல் ஃபினான்ஸ் வலையமைப்பில்
சேர்க்கப்படும் 20 ஆவது கிளையைக் குறிக்கும் வகையில், இடம்பெற்ற விசேட திறப்பு விழா
நிகழ்வின் மத்தியில் புதிய குளியாப்பிட்டி கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தெரிவு
செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள், பல்வேறு பிரமுகர்கள் மற்றும் மஹிந்திரா ஐடியல்
ஃபினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ அணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்விழாவில்
கலந்து சிறப்பித்துள்ளனர். இலக்கம் 26, மாதம்பே வீதி, குளியாப்பிட்டி என்ற முகவரியில்
இப்புதிய கிளை அமைந்துள்ளது.
மஹிந்திரா ஐடியல் ஃபினான்ஸின் பிராந்திய முகாமையாளரான சமன் தர்மசிறி அவர்கள்
குளியாப்பிட்டியில் புதிய கிளையை திறந்து வைத்துள்ளமை தொடர்பில் கருத்துத்
தெரிவிக்கையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் அரை
நகர்ப்புற சந்தைகளில் பொருத்தமான நிதியியல் தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் கவனம்
செலுத்தியுள்ளோம். எங்கள் வலையமைப்பு விஸ்தரிப்பு மூலோபாயமானது நாடு முழுவதும்
உள்ள முக்கிய வணிக மையங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், இது எங்கள்
வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை எளிதாக்கும்.
குளியாப்பிட்டியும் அத்தகைய வர்த்தக மையங்களில் ஒன்றாகும் என்பதுடன்,
வாடிக்கையாளர்கள் தங்கள் அபிலாஷைகளை அடையப்பெறுவதற்கு உகந்த நிதியியல்
தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதை எங்கள் சந்தை ஆய்வு முடிவுகள் காண்பிக்கின்றன.
எனவே, இப்போது இந்த பிராந்தியங்களுக்கு சேவைகளை வழங்குவதில் நாங்கள் மிகவும்
மகிழ்ச்சியடைகிறோம் என்பதுடன், மேலும் வெகு விரைவில் நாங்கள் திட்டமிட்டுள்ள
வலையமைப்பு விரிவாக்க முயற்சிகளை முன்னெடுக்கவும் எதிர்பார்க்கிறோம். இதற்கிடையில்.
எங்களது புதிய குளியாப்பிட்டி கிளைக்கு வருகை தந்து, மஹிந்திரா ஐடியல் ஃபினான்ஸ் மூலம்
கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நேரடியாக அறிந்து கொள்ளுமாறு எங்கள்
வாடிக்கையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.
மஹிந்திரா ஐடியல் ஃபினான்ஸ் நிறுவனம் இலங்கையில் உகந்த நிதியியல் தீர்வுகளை
வழங்கும் அதேசமயம், நிதியியல் சேவைகள் துறையில் தங்கள் தொழில் வாழ்க்கையை
கட்டியெழுப்ப அல்லது விரிவுபடுத்த விரும்புவோருக்கு ஒரு பொருத்தமான தெரிவாகும்.
பலதரப்பட்ட தொழில் வல்லுநர்கள் அணி மற்றும் நன்மதிப்புடைய நிறுவன கலாச்சாரத்தின்
தாயகமாக இருப்பதால், மஹிந்திரா ஐடியல் ஃபினான்ஸ் தொடர்ந்து 3 ஆண்டுகளாக, 2019,
2020 மற்றும் 2021 இல் Great Places to Work ஆல் Great Place to Work என்ற
அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும்
காப்புறுதித் துறைகளில் மிகச் சிறந்த 10 பணியிடங்களில் ஒன்றாக மஹிந்திரா ஐடியல்
ஃபினான்ஸ் Great Places to Work ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா ஃபினான்சியல் சேர்விசஸ் லிமிட்டெட்டின் துணை நிறுவனமான
மஹிந்திரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட், ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனம் என்பதுடன்,
மற்றும் இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனம்
ஆகும். கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற துறைகளில் மிகத் தெளிவான கவனம்
செலுத்தியவாறு, 2012 மார்ச்சில் இந்நிறுவனம் தொழிற்பட ஆரம்பித்தது. அதன் கடன் வழங்கல்
துறைகளில் தங்கக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் மோட்டார் கார்கள், முச்சக்கர
வண்டிகள், விவசாய வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களுக்கான குத்தகை வசதிகள்
ஆகியன அடங்கியுள்ளன. அதே நேரத்தில் வைப்பாளர்களுக்கு அவர்களின் முதலீடுகளுக்கு
கவர்ச்சிகரமான வருமானத்தையும் இது வழங்குகிறது. மஹிந்திராவுடன் இணைந்ததைத்
தொடர்ந்து, மஹிந்திரா ஃபினான்ஸ், ஆனது மஹிந்திரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட்
நிறுவனத்தின் கட்டுப்பாட்டுப் பங்குகளை கையகப்படுத்தியுள்ளதன் மூலம், Fitch Ratings
Lanka இடமிருந்து AA-(lka) கடன் தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.