
ComBank இலங்கையில் 'சிறந்த கூட்டாண்மை வங்கி' மற்றும் 'சிறந்த சில்லறை வங்கி' எனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது
May 6, 2022 12:27 pm
ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாகக் கொண்ட Global Business Review சஞ்சிகையின் வருடாந்த விருதுகளில் சிறந்த சில்லறை வங்கி இலங்கை 2022 மற்றும் சிறந்த கூட்டாண்மை வங்கி 2022
ஆகிய விருதுகளை கொமர்ஷல் வங்கி வென்றுள்ளது.
2021 இல் அதன் செயல்திறனை மதிப்பாய்வு செய்த ஒரு சுயாதீன ஆய்வுக் குழுவின் முடிவுகளின்
அடிப்படையில் வங்கிக்கு இந்தப் பாராட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பிடப்பட்ட ஆண்டில்
கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் தரப்படுத்தல் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தனியார்
வங்கியாகத் திகழ்ந்தது. நாட்டில் உள்ள தனியார் வங்கிகளில் துறை சார்ந்த முன்னணி செயல்திறன்
குறிகாட்டிகள் மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் அதிக சந்தை மூலதனம்ரூபவ் அதிக மொத்த வருமானம்ரூபவ் வரிக்கு முந்திய மற்றும் பின்னரான
அதிக லாபம் மொத்த சொத்துக்களில் அதிக மதிப்பு மொத்த கடன்களில் அதிக மதிப்பு
கடன்களின் அதிக சந்தை பங்கு அதிக மொத்த பங்குதாரர் நிதி அதிக செயல்பாட்டு வருமானம்
அதிகபட்ச மொத்த வைப்பு அதிக நிலையான வைப்புக்களின் சந்தை பங்கு மற்றும் அதிக CASA
விகிதம் ஆகியன மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
குளோபல் பிசினஸ் ரிவியூ சஞ்சிகையின்; விருதுகள் என்பது வங்கிரூபவ் நிதி காப்பீடு ரியல்
எஸ்டேட் தலைமைத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களின்
அசாதாரண செயல்திறனைக் கௌரவிப்பதற்கும் விருதுகளில் அளிப்பதற்குமான ஒரு தளமாகும்.
குளோபல் பிசினஸ் ரிவியூ என்பது ஒரு ஒன்லைன் சஞ்சிகையாகும் இது உலகம் முழுவதும் உள்ள
தொழில்களில் இருந்து செய்திகள் அம்சங்கள் பகுப்பாய்வு வர்ணனைகள் மற்றும் நேர்காணல்களை வழங்குகிறது.
இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி உலகின் தலைசிறந்த 1000
வங்கிகளில் தொடர்ந்தும் 11 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கி கொமர்ஷல்
வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 268 கிளைகள் மற்றும் 938 தானியங்கி
இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர
வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல்
புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை
உள்ளடக்கியது அங்கு வங்கி 19 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி
நிறுவனத்தினை கொண்டுள்ளது: மற்றும் மாலைதீவில் வங்கி பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட
முழு அளவிலான வங்கியாக காணப்படுகின்றது.