Back to Top

வனிந்துவின் சுழலில் சுருண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வனிந்துவின் சுழலில் சுருண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத்

May 9, 2022  06:48 am

Bookmark and Share
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாட பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ஓட்டங்கள் விளாசினார்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதரபாத் அணி 19.2 ஓவரில் வெறும் 125 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது.

இதனால், 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா டி சில்வா ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்பட்டார்.