Back to Top

அமானா தகாஃபுல் ஆயுள் காப்புறுதி 2021 இல் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் மீளெழுச்சி

அமானா தகாஃபுல் ஆயுள் காப்புறுதி 2021 இல் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் மீளெழுச்சி

May 12, 2022  02:18 pm

Bookmark and Share
அமானா தகாஃபுல் ஆயுள் காப்புறுதியானது (Amana Takaful Life Insurance- ATLI), 2021 ஆம் ஆண்டில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சவாலான காலகட்டத்திலிருந்து படிப்படியாக மீண்டு வருவதை காண்பிக்கிறது. 2021ஆம் ஆண்டில், அமானா தகாஃபுல் லைஃப் அதன் Gross Written Premium Contribution (GWP) யினை உயர்வடையச் செய்துள்ளதுடன், நிறுவனத்தின் உறுதியான 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயல்திறனானது, காலாண்டிலிருந்து காலாண்டுக்கு வெற்றிகரமான வகையில் அதிகரித்த, உறுதியான கட்டமைப்பை பேணி வந்துள்ளது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் 163% நிகர இலாப வளர்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 2020ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிலையான 32% GWP வளர்ச்சியைப் பதிவுசெய்தமை உள்ளிட்ட, வருடம் முழுவதும் அதன் வெற்றிகரமான காலாண்டு வளர்ச்சி பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஹான் ராஜபக்ஷ விபரிக்கையில், “காப்புறுதித் துறைக்கு 2021ஆம் ஆண்டானது இலகுவான ஆண்டாக அமைந்திருக்கவில்லை. காரணம், கொவிட் தொற்றுநோய் மேலும் உக்கிரமடைந்த ஆண்டாக அது அமைந்திருந்ததுடன், ஏனைய எதிர்பாராத பொருளாதார சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய திடீர் சூழல்கள் ஏற்பட்டிருந்தன. எமது அறிக்கைகளுக்கமைய, நாம் 2021ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த வருடாந்த அடித்தளத்தை உயர்த்தியவாறு, இவ்வாறான சவால்களை தைரியமாக சமாளித்து, அதில் வெற்றி கண்டு, 4ஆவது காலாண்டைப் பதிவு செய்துள்ளமை புலனாகின்றது. அமானா லைஃப் இன்சூரன்ஸ் (ATLI) ஆனது, கடந்த சில ஆண்டுகளாக அது எதிர்கொண்ட சவாலான நிலைமைகளைக் கடந்து, 2021 இல் அதன் நிகர இலாபத்தில் சிறந்த 128% வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் நாம் ஒரு தெளிவான திருப்பத்தை அடைந்தது மட்டுமல்லாமல், சமீபத்திய பொருளாதார ரீதியாக மிகவும் சவாலான காலங்களில் நாம் அதைச் செய்துள்ளமையானது, அமானா லைஃப் இரட்டை வெற்றியைப் பதிவு செய்துள்ளமையை காண்பிக்கின்றது. 2021 ஆம் ஆண்டில், நிறுவனம் அதன் மொத்த Written Premium Contribution (GWP) யினை, வருடாந்தம் 21% எனும் நிலையான பெறுமானத்தை நோக்கி உயர்த்தி, மொத்தமாக ரூ. 881.7 மில்லியனை பதிவு செய்துள்ளது. எமது முதல் வருட வழக்கமான வணிக ப்ரீமியத்தில் குறிப்பிடத்தக்க 35% வளர்ச்சியின் மூலம் எமது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நன்கு ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில், எமது மொத்த சொத்துகள், வருடத்திற்கு 7.6% இனால் அதிகரித்து ரூ. 3.33 பில்லியனாக உயர்ந்துள்ளது. அத்துடன், அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில், இலங்கை முழுவதும் சுமார் 35 இடங்களில் எமது வலையமைப்பை விரிவுபடுத்தவும் முடிந்துள்ளது.என்றார்.

நிறுவனத்தின் இந்த வெற்றி தொடர்பில் அமானா தகாஃபுல் லைஃப் இன்சூரன்ஸ் தலைவர் ஒஸ்மான் காசிம் தெரிவிக்கையில், “ஒரு சில வருடங்களுக்கு முன்னர், அமானா தகாஃபுல் லைஃப் புதிய தலைமையின் கீழ் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மூலோபாய திசையில் நிறுவனத்தை சாதகமான வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தும் நோக்கத்துடன் அது தனது பயணத்தை ஆரம்பித்தது. 2021 ஆம் ஆண்டில், நாம் அடைந்த குறிப்பிடத்தக்க திருப்பத்தின் விளைவாக, எமது திட்டம் நிறைவேறியுள்ளது என, தற்போது என்னால் கூற முடியும். எமது 2021ஆம் வருடத்தின் வெற்றிகள், ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பம் என நான் நம்புகிறேன். நிதி ரீதியாக மட்டுமல்லாமல், எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதிலும், அனைத்து பங்குதாரர்களுடனும் நாம் எவ்வாறு தொடர்புறுகின்றோம் என்பதிலும் நிறுவனம் மேலும் வலுவாக செயற்பட எதிர்பார்க்கிறது. 2021ஆம் ஆண்டை வெற்றிகரமாக பதிவு செய்தமை தொடர்பில், அமானா லைஃப் குழுவினரை வாழ்த்துவதற்கு நான் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்!” என்றார்.

அமானா தகாஃபுல் காப்புறுதி பற்றி:

அமானா தகாஃபுல் காப்புறுதியானது, இலங்கையின் காப்புறுதித் துறையில் (தகாஃபுல்) தனித்துவமான கருத்தாக்கத்தின் முன்னோடியாக அமைந்துள்ளது. அது வாடிக்கையாளர்களை மையப்படுத்தியதும் நெறிமுறை, நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதுடன், அது இன்று இலங்கையில் முழுமையான காப்புறுதி நிறுவனமாக மாறியுள்ளது. அமானா தகாஃபுல் காப்புறுதியானது, 1999 இல் ஒரு பொது நிறுவனமாக கூட்டிணைக்கப்பட்டதோடு, 2006ஆம் ஆண்டு முதல் கொழும்பு பங்குச் சந்தையில் அது பட்டியலிடப்பட்டுள்ளது. அமானா தகாஃபுல் காப்புறுதியானது, இலங்கை முழுவதும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் 35 இற்கும் அதிக கிளைகள் மூலம் அதன் இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. அமானா தகாஃபுல் காப்புறுதியானது முழு அளவிலான ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதித் தீர்வுகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒட்டுமொத்த சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட சுகாதார காப்புறுதிக் கொள்கைகளை வழங்குகிறது.