
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அதிர்ச்சி தகவல்...
May 12, 2022 02:47 pm
கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கொரோனாவின் ஏதேனும் ஒரு அறிகுறி இன்னமும் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த நீண்ட நாள்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் தி லான்சென்ட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவில் 1,192 பேர் பங்கேற்ற இந்த ஆய்வில், 2020ஆம் ஆண்டு கொரோனா பேரிடரின் போது கொரோனா பாதித்தவர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் மூலம், மற்றவர்களை விட, கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மோசமான உடல்நலத்துடன், மற்றவர்களைக் காட்டிலும் மோசமான வாழ்முறையையே கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அதிக காலம் கொரோனா பாதிப்பு இருந்தவர்களுக்கு மயக்கம், மூச்சுத் திணறல், உறக்கமின்மை போன்ற ஏதேனும் ஒரு கொரோனா அறிகுறி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 68 சதவீதம் பேருக்கு ஆறு மாதங்கள் வரை கரோனா அறிகுறி நீடித்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா அறிகுறி நீடித்தவர்களின் எண்ணிக்கை 55 சதவீதமாகக் குறைந்திருப்பதாகவும் கூறுப்படுகிறது.