Back to Top

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் சனத் மனதுங்க நியமனம்

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் சனத் மனதுங்க நியமனம்

May 12, 2022  04:23 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரியாக இருந்த சனத் மனதுங்க வங்கியின் புதிய முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. 2022 மே 12 முதல் இந்நியமனம் அமுலுக்கு வருகின்றது. சனத் மனதுங்கவின் பதவி உயர்வின்; தொடராக செல்லத்துரை பிரபாகர் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 மே 11ல் ஓய்வு பெற்ற சிவகிருஷ்ணராஜா ரெங்கநாதனின் பதவிக்கே சனத் மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ரெங்கநாதன் கொமர்ஷல் வங்கியில் 41 வருட கால கீர்த்திமிக்க சேவையை நிறைவு செய்கின்றார்.

சனத் மனதுங்க கடந்த 32 வருடங்களாக வங்கியில் பணியாற்றி வருகின்றார். இதில் கடந்த நான்கு வருடங்களாக நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியாகவும் அவர் பணிபுரிந்துள்ளார். அவர் முன்னர் வங்கியின் கூட்டாண்மை வங்கி மற்றும் வர்த்தக நிதிப்பிரிவுக்கு பிரதி பொது முகாமையாளராகப் பணியாற்றி உள்ளார். வங்கியின் பிரதான இடர் அதிகாரியாகவும் அவர் பணிபுரிந்துள்ளார். அவரது தலைமையின் கீழ் கூட்டாண்மை வங்கிப் பிரிவு துரித கடன் புத்தக வளர்ச்சியையும் வர்த்தக நிதி கட்டண அடிப்படையிலான வருமானத்தில் வளர்ச்சி என்பனவற்றையும் அனுபவித்துள்ளது. அதேவேளை கடன் வழங்குதலின் தரத்தையும் அவர் பேணி வந்துள்ளார்.

சனத் மனதுங்க பிரதம செயற்பாட்டு அதிகாரியாக இருந்த காலப்பகுதியில் வங்கியின் தனியார் வங்கிப்பிரிவு கூட்டாண்மை வங்கிப்பிரிவு தகவல் தொழில்நுட்பப்பிரிவு கார்ட் பிரிவு டிஜிட்டல் வங்கிப்பிரிவு என பல மூலோபாய முக்கியத்துவம் மிக்க பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி உள்ளார். இந்தப் பிரிவுகள் தொழில்துறையில் தலைமை தாங்கவும் அவர் வழிகாட்டி உள்ளார்.

வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிப் பிரிவு மாற்றம் (SME Transformation) வங்கிக்கான நீண்டகால டிஜிட்டல் பாதையை வகுத்துக் கொடுத்தல் என்பன உட்பட வங்கியின் செயற்பாட்டு ஆற்றலை மேம்படுத்தக் கூடிய பல மூலோபாய திட்டங்களுக்கான உள்ளீடுகளை அமைத்துக் கொடுத்து அவற்றுக்குத் தலைமை தாங்கியும் பங்களிப்புச் செய்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் பட்டயக் கணக்காளர் நிறுவனம் (FCMA-UK) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் வர்த்தக நிர்வாக முதுமாணிப் பட்டம் ஆகிய கல்வித் தகமைகளைக் கொண்டுள்ள மனதுங்க இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் (FIB) முழுநேர உறுப்பினருமாவார். அத்தோடு ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ நிலைய UK (FCMI) உறுப்பினறுமாவார். 2017 ஆகஸ்ட் முதல் இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராகவும் அவர் உள்ளார்.

கொமர்ஷல் வங்கியின் புதிய பிரதான செயற்பாட்டு அதிகாரி செல்லத்துரை பிரபாகர் தற்போதைய பதவிக்கு முன் கூட்டாண்மை வங்கிப் பிரிவின் பிரதி பொது முகாமையாளராக இருந்துள்ளார். சிரேஷ்ட வங்கியாளரான இவர் வங்கியின் பல்வேறு பிரிவுகளில் 26 வருட சேவையைப் பூர்த்தி செய்துள்ள அனுபவம் கொண்டவர். பிரபாகர் கொமர்ஷல் வங்கியின் பங்களாதேஷ் கிளையில் பிரதம செயற்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். அத்தோடு 2009ல் முழு செயற்பாடுகளுக்கும் பொறுப்பான வதிவிட முகாமையாளராகவும் இருந்துள்ளார். கொமர்ஷல் வங்கி அதன் இரண்டு கிளைகளில் இருந்து பங்களாதேஷில் 19 கிளைகளைத் திறக்கவும் இவர் மூல காரணமாகத் திகழ்ந்துள்ளார். அது மட்டுமன்றி அங்குள்ள 10 வெளிநாட்டு வங்கிகளில் அதிக இலாபமீட்டும் மூன்றாவது வங்கியாக கொமர்ஷல் வங்கித் திகழ காரணகர்த்தாவாகவும் அவர் இருந்துள்ளார். வங்கியின் ஒட்டு மொத்த அடிமட்டப் பங்களிப்பில் 15 வீதமாக இது அமைந்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழகத்தின் வங்கித் துறை MBA பட்டதாரியான பிரபாகர் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் இணை உறுப்பினராவார் (AIB - SL) இந்தியாவின் பாரதிதாஸன் பல்கலைக்கழகத்தின் B.Com பட்டதாரியும் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் (Charted Institute of Management Accountants - UK) தகுதியையும் இவர் கொண்டுள்ளார். மேலதிகமாக இவர் CISA (Certified in System Audit – USA) மற்றும் Diploma in System Security and Control Audit (DISSCA – CASL). தகுதிகளையும் தன்னகத்தே கொண்டவராவார்.

இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் தொடர்ந்தும் 11 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கி கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 268 கிளைகள் மற்றும் 938 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 19 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது: மற்றும் மாலைதீவில் வங்கி பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழு அளவிலான வங்கியாக காணப்படுகின்றது.