
கொம்பாங்க் டிஜிட்டல் மூலம் மற்றொரு முதலாவது சேவை SLSI கொடுப்பனவுகளுக்கு இணைய வழி வசதி
May 13, 2022 02:08 pm
இலங்கை தரப்படுத்தல் நிலையத்துக்கு (SLSI) இணைய வழி கொடுப்பனவு சேவைகளை ஏற்படுத்திக்
கொடுத்துள்ள முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி அமைந்துள்ளது. கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல்
வங்கிச் சேவையுடன் இந்நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் SLSI க்கு தமது கொடுப்பனவுகளைச்
செலுத்த வேண்டிய வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் அதைச் செய்ய முடியும்.
SLSI இன் மொத்த மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு www.combankdigital.com என்ற
இணையத்தில் பிரவேசித்து நேரடியாக தமது கொடுப்பனவுகளைச் செய்யலாம். iOS அன்ட்ரோயிட்
அல்லது ஹுவாய் கையடக்க கருவிகள் மூலம் உரிய மென்பொருள் செயலியை தரவிறக்கம் செய்து பாவிக்க
முடியும்.
பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்கு தேவையான தொழில் தரம் வாய்ந்த உயர் மட்ட
பாதுகாப்புடன் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான
டிஜிட்டல் வங்கி அனுபவத்தை வழங்குகின்றது. இது காகிதப் பாவனை அற்ற செயற்பாடு என்பதால்
வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கோ அல்லது SLSI அலுவலகத்துக்கோ விஜயம் செய்ய வேண்டியத் தேவை
இல்லை. வங்கியின் பசுமை முயற்சிகளுக்கும் இது பங்களிப்புச் செய்கின்றது. வாடிக்கையாளர்கள்
சுற்றாடலுக்கு இசைவுள்ள விதத்தில் செயற்படவும் இது உதவுகின்றது என வங்கித் தெரிவித்துள்ளது.
இந்த இணையவழி கொடுப்பனவு முறையைப் பயன்படுத்தரூபவ் இணைய மேடையில் உள்ள ‘Billers’ பிரிவை
வாடிக்கையாளர்கள் தெரிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் தேவையான பகுதிக்குச் சென்று
கொடுப்பனவை செய்ய முடியும். வெற்றிகரமாக கொடுப்பனவு நிறைவுற்றதும் அதை உறுதி செய்யும்
வகையில் இணைய வழி பற்றுச் சீட்டு ஒன்றையும் வாடிக்கையாளர் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இந்த ஒத்துழைப்பு பற்றி கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கிக் குழுமத்தின் பிரதான
சந்தைப்படுத்தல் அதிகாரி ஹஸ்ரத் முனசிங்க ´கொம்பாங்க் டிஜிட்டல் சேவையில் இணைத்துக்
கொள்ளப்பட்ட புதிய அரசாங்க நிறுவனமாக SLSI அமைந்துள்ளது. தொழில்நுட்பத்தால் ஏற்படுத்தக்
கூடிய சகல வசதிகளிலும் கொமர்ஷல் வங்கி கவனம் செலுத்தி வருகின்றது. அதற்கேற்ப தனது டிஜிட்டல்
வங்கிச் சேவை ஆற்றலையும் அது மேம்படுத்தி வருகின்றது. வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை வழங்கி
அவர்கள் தமது அன்றாட வங்கிச் சேவைகளை குறிப்பிட்ட நேரத்தில் எவ்வித பரபரப்பும் இன்றி தமது
தனிப்பட்ட கருவிகள் மூலமே நிறைவேற்றிக் கொள்ள வழியமைக்கும் வகையில் இவை
செய்யப்படுகின்றன´ என்று கூறினார்
இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி உலகின் தலைசிறந்த 1000
வங்கிகளில் தொடர்ந்தும் 11 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கி கொமர்ஷல்
வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 268 கிளைகள் மற்றும் 938 தானியங்கி
இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர
வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல்
புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை
உள்ளடக்கியது அங்கு வங்கி 19 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி
நிறுவனத்தினை கொண்டுள்ளது: மற்றும் மாலைதீவில் வங்கி பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட
முழு அளவிலான வங்கியாக காணப்படுகின்றது.