
அமைச்சு பதவிகள் வேண்டாம் - புதிய அரசும் வேண்டாம்!
May 13, 2022 02:24 pm
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா அல்லது அரசாங்கத்தை அமைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இன்று (13) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஏற்கபோவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அமையப்போகும் அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.