Back to Top

இலங்கையில் TECNO மொபைல் விநியோகத்துக்காக Transsion Holdings உடன் Gestetner-Telkom கைகோர்ப்பு

இலங்கையில் TECNO மொபைல் விநியோகத்துக்காக Transsion Holdings உடன் Gestetner-Telkom கைகோர்ப்பு

May 13, 2022  05:22 pm

Bookmark and Share
அலுவலக தன்னியக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதில் முன்னோடிகளாகவும், பல தசாப்த கால நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள நிறுவனமுமான Gestetner of Ceylon PLC இன் புதிதாக நிறுவப்பட்ட பிரிவான Gestetner-Telkom தொலைத்தொடர்பாடல் உப பிரிவில் பிரவேசித்துள்ளதுடன், உலகின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமங்களில் ஒன்றும், ஆபிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் பிரிவில் சந்தை முன்னோடியாக அமைந்திருக்கும் TECNO மொபைல்களை இலங்கையில் விநியோகிக்க Transsion Holdings உடன் கைகோர்த்துள்ளது.

“Stop At Nothing” எனும் உயர்ந்த தொனிப்பொருளைக் கொண்டுள்ள முன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமும், ஸ்மார்ட் சாதனமுமாகவும் திகழும் TECNO, தமது மதிநுட்பமான மற்றும் நவநாகரீகமான வாழ்க்கை முறைகளை இணைப்பதற்கு உலகுக்கு ஸ்மார்ட் சாதனங்களை வடிவமைத்து வழங்குகின்றது. 70 நாடுகளில் TECNO பிரசன்னத்தை கொண்டுள்ளதுடன், 80,000க்கும் அதிகமான விற்பனை பகுதிகளை கொண்டு இயங்குகின்றது. தரவுகள் அடிப்படையில் இயங்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச R&D புத்தாக்க நிலையங்களினூடாக செயலாற்றுவதுடன், தயாரிப்பு வடிவமைப்பு, கமரா மற்றும் வர்த்தக நாமப் புகழ் போன்றவற்றில் விருது வென்ற தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளது.

மொபைல் தொலைபேசிகள் இறக்குமதியில் TRC இன் அனுமதி பெற்று இயங்கும் Gestetner- Telkom, TECNO மொபைல் ஊடாக இளம் நுகர்வோரை சென்றடைய எதிர்பார்ப்பதுடன், அதற்காக நாட்டின் முக்கியமான பகுதிகளில் பிராந்திய விநியோகத்தர்களைக் கொண்டுள்ளது. Gestetner of Ceylon PLC இன் தவிசாளர் சயீட் அஸ்சார் கருத்துத் தெரிவிக்கையில், “எமது புதிய பிரிவான ‘Gestetner-Telkom’உடன் மொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையினுள் Gestetner of Ceylon PLC பிரவேசித்துள்ளமை தொடர்பில் அறிவிப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். Transsion Holdings மற்றும் TECNO வர்த்தக நாமத்துடன் கைகோர்த்துள்ளதனூடாக, எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான ஸ்மார்ட்ஃபோன் சாதனங்களைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதுடன், விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்கவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

Transsion Holdings இன் இலங்கைக்கான பணிப்பாளர் ரே சோ (Ray Chaw) கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் எமது பங்காளராக Gestetner-Telkom ஐ கொண்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அவர்களின் பல தசாப்த கால அனுபவம் மற்றும் ஒப்பற்ற

சேவைகளுடன், நவீன தோற்றம் மற்றும் உத்வேகத்துடன், எமது TECNO தொலைபேசி தெரிவுகளை இளம் பாவனையாளர்கள் மத்தியில் உயர் தெரிவுக்குரிய கையடக்க தொலைபேசிகளாக திகழச் செய்யக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம்.” என்றார்.

Gestetner-Telkom இனால் TECNO POP 5 LTE தொலைபேசி ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதில் 6.52" HD+ Dot Notch Screen, large 5000 mAh long பற்றரி ஆயுள், 8MP AI இரட்டை பின்புற கமிரா உடன் Dual Flash, 32GB ROM + 2GB RAM, Fingerprint Unlock போன்ற பல உள்ளம்சங்கள் காணப்படுகின்றன.

விரைவில் TECNO Spark 8C தொலைபேசியை அறிமுகம் செய்வதற்கு Gestetner-Telkom திட்டமிட்டுள்ளது. Spark 8C என்பது 6.6" HD+ Dot Notch display, with upto 6GB larger RAM, 5000mAh பற்றிரி, 13MP பின்புற இரட்டைக் கமரா மற்றும் Dual Flashlight உடன் 8MP Selfie கமராவுடன் முன்புற flash மற்றும் IPX2 Splash Resistant ஆகிய அம்சங்கள் காணப்படுகின்றன. Gestetner-Telkom பொது முகாமையாளர் மஞ்சுள ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட் சாதனங்களுடன் மக்கள் இணைந்துள்ளனர். Gestetner-Telkom ஐச் சேர்ந்த நாம் அணியாக முன்னேறி, இலங்கையில் TECNO வர்த்தக நாமத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், ஸ்மார்ட் சாதனங்களினூடாக வாழ்வுகளை இணைக்கின்றோம். சிறந்த விற்பனைக்கு பிந்திய சேவைகளினூடாக, எமது வாடிக்கையாளர்களை இணைப்பை ஏற்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

புத்தாக்கம், தொழில்நுட்ப மற்றும் கலையம்சங்களினூடாக, பரந்த தயாரிப்பு உள்ளம்சங்களைக் கொண்டுள்ள ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட் AIoT தயாரிப்புகள், போன்றவற்றைக் கொண்டுள்ள TECNO, உலகளாவிய ரீதியில் முன்னேறும் இளம் வாடிக்கையாளர்களின் வளர்ச்சிக்கு கைகொடுக்கக்கூடிய சிறந்த தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலதிக தகவல்களைப் பார்வையிடுவதற்கு https://www.tecno-mobile.com/lk/