
ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் கடிதம்
May 13, 2022 09:02 pm
பிரதமர் பதவி மற்றும் அமைச்சர் பதவி குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் ஒன்றை சஜித் பிரேமதாச அனுப்பியுள்ளார்.
பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்த போது, அதனை ஏற்கத் தயாராக இல்லை என தாம் கூறவில்லை என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியினால் அமைக்கப்படும் அமைச்சரவையில் எந்தவொரு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரும் இடம்பெற மாட்டார்கள் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.