
சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க விளக்கமறியலில்
May 18, 2022 04:47 pm
பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நேற்றைதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.