
சாதாரண தரப் பரீட்சை மாணவர்களின் போக்குவரத்து குறித்த அறிவிப்பு
May 18, 2022 07:06 pm
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை எவ்வித இடையூறும் இன்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்துவது தொடர்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (18) அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.
இதற்காக மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் சாதாரண புகையிரதங்கள் சேவைகள் ஈடுபடும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.