
எச்சரிக்கை : இலங்கையில் ஏற்படப் போகும் பஞ்சம்!
May 20, 2022 09:44 am
இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், உரத் தட்டுப்பாடு காரணமாக போதியளவு நெல் அறுவடை கிடைக்கப் பெறாது.
உலக அளவிலும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த நெருக்கடி நிலைமை நீடிக்கும். இதனை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.