
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இனி உணவு இல்லை!
May 20, 2022 04:01 pm
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற உணவகத்தில் உணவு வழங்குவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் மதியப் போசனத்தை நிறுத்துமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் 53 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தில் பதில் அளிக்கும் வகையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.