Back to Top

இலங்கையில் அதிகரித்த கோழி இறைச்சியின் விலை!

இலங்கையில் அதிகரித்த கோழி இறைச்சியின் விலை!

May 22, 2022  08:33 am

Bookmark and Share
இலங்கையின் சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,000 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில பகுதிகளில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை சுமார் 1,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.

சிங்கள - தமிழ் புத்தாண்டிலிருந்து ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை சுமார் 950 - 980 ரூபாவாக காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதன்முறையாக இந்த வாரம் கோழி இறைச்சியின் விலை 1,000 ரூபாயைத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாளாந்தம் பல பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.