
ரஜினியின் அடுத்த படம் 'ஜெயிலர்'
June 17, 2022 02:46 pm
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்துக்கு ஜெயிலர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரியங்கா மோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே, கிளி அரவிந்த் உட்பட நெல்சன் பட நடிகர்கள் இந்தப் படத்திலும் இருக்கிறார்களாம்.
முதலில் கே.எஸ்.ரவிக்குமார் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதுவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க மட்டும் செய்கிறாராம். இந்தப் படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.