
டி20 உலகக் கோப்பையில் கட்டாயம் ஆடுவேன்
June 19, 2022 05:58 pm
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள அடுத்த டி20 உலகக் கோப்பை போட்டியில் கட்டாயம் ஆட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என பினிஷா் தினேஷ் காா்த்திக் கூறியுள்ளாா்.
வெள்ளிக்கிழமை இரவு ராஜ்கோட்டில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்த போது, அபாரமாக ஆடிய தினேஷ் காா்த்திக் 27 பந்துகளில் 55 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டாா் தினேஷ் காா்த்திக். இதனால் தொடா் தற்போது 2-2 என சமநிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தினேஷ் காா்த்திக் கூறியதாவது, வரும் டி20 உலகக் கோப்பையில் கட்டாயம் ஆட வேண்டும் என்தில் உறுதியாக உள்ளேன். இது எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அணியில் சோ்க்கப்படாவிட்டால் ஏற்படும் நிலையை அறிவேன். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி எனக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது. கடைசி கட்டத்தில் ரசித்து ஆடினேன். பல்வேறு ஆட்டங்களில் இந்தியா வெல்ல உதவ வேண்டும் என்றாா் தினேஷ்.