Back to Top

 JAT Holdings இது வரையில் அதன் மிகச் சிறந்த நிதியாண்டைப் பதிவாக்கி, ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது

JAT Holdings இது வரையில் அதன் மிகச் சிறந்த நிதியாண்டைப் பதிவாக்கி, ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது

June 20, 2022  06:22 pm

Bookmark and Share
இலங்கையின் பல்தேசிய கூட்டு நிறுவனமும் மரப் பூச்சுகள் தொழிற்துறையில் முன்னணி நிறுவனமுமான JAT Holdings PLC, 2021/22 நிதியாண்டில் வரிக்குப் பிந்திய இலாபத்தை இரட்டிப்பாக்கி, இது வரையில் தனது சிறந்த நிதியாண்டைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இலங்கையில் முன்னெப்போதும் அனுபவித்திராத மிகவும் சவாலான பொருளாதார சூழலுக்கு மத்தியில், எந்த சூழலிலும் மீண்டு எழுகின்ற பெறுபேற்றுத்திறனைக் வெளிக்காண்பித்தவாறு, நிறுவனத்தின் வருமானம் 66% வீதத்தால் அதிகரித்து, ரூபா 8.897 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டில் ரூபா 5.36 பில்லியனாக இருந்தது. இதற்கிடையில், 2020/21 நிதியாண்டில் பதிவாக்கப்பட்ட ரூபா 1.644 பில்லியனுடன் ஒப்பிடுகையில், மொத்த இலாபம் 58% ஆல் அதிகரித்து ரூபா 2.603 பில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், தொழிற்பாட்டு இலாபம் 73% ஆல் அதிகரித்துள்ளது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், JAT Holdings PLC அதன் வரிக்குப் பிந்திய இலாபத்தை மிகவும் போற்றத்தக்க வகையில் 102% ஆல் அதிகரித்து ரூபா 1.211 பில்லியனாகப் பதிவாக்கியுள்ளதுடன், இது முந்தைய ஆண்டில் ரூபா 600 மில்லியனாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் குழும வருமானத்தில் 23% பங்கானது ஏற்றுமதி வருமானங்களின் வளர்ச்சி மூலமாக ஈட்டப்பட்டுள்ளதுடன், முந்தைய ஆண்டில் இது 12% ஆக காணப்பட்டது. இது ஏற்றுமதி சார்ந்த நடவடிக்கைளை நோக்கி வர்த்தக முயற்சிகள் கவனம் செலுத்தப்பட்டுள்ளமையை புலப்படுத்துகின்றது.

இந்த ஆண்டில், நிறுவனம் அதன் மொத்த இலாப மட்டங்களை 29% ஆகப் பேண முடிந்துள்ள அதே நேரத்தில், மீளாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் உள்ளீட்டு செலவு பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி ஏற்ற இறக்கம் காரணமாக தொழிற்பாட்டு இலாபம் 13% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒரு பங்கொன்றுக்கு ரூபா 0.32 மற்றும் ரூபா 0.25 மதிப்புள்ள இரண்டு வெவ்வேறு இடைக்கால பங்கு இலாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க நிறுவனத்தால் முடிந்துள்ளது. முக்கிய துறைசார் வளர்ச்சியின் பகுப்பாய்வின்படி, மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில், மரப் பூச்சுகள் 61% ஆலும், அலங்காரங்கள் (WHITE by JAT அடங்கலாக) 77% ஆலும் மற்றும் தீந்தை தூரிகைகள் 43% ஆலும் வளர்ச்சி கண்டுள்ளன. இது அளவு மற்றும் மதிப்பு இரண்டிலும் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

நிறுவனத்தின் நிதியியல் பெறுபேற்றுத்திறனைப் பற்றி கருத்து வெளியிட்ட இந்நிறுவனத்தின் ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஈலியன் குணவர்தன அவர்கள், “எமது ஆரம்ப பொதுப் பங்கு வழங்கலின் போது எங்கள் பங்குதாரர்களுக்கு நாங்கள் வழங்கிய வாக்குறுதி மற்றும் அர்ப்பணிப்பை நாம் நிலைநாட்டியுள்ளோம் என்பதைக் கூறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வாக்குறுதியளித்தபடி ரூபா 1.2 பில்லியன் வரிக்குப் பிந்திய இலாபத்தை ஈட்டியுள்ளோம். மேலும், இலங்கை அனுபவித்து வருகின்ற மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த சாதனை இலக்கினை நாம் அடைந்துள்ளோம். எனவே, JAT Holdings PLC எத்தகைய இன்னல்களை எதிர்கொண்டாலும், சிறந்த மதிப்பை வழங்கும் ஆற்றலைக்’ கொண்டுள்ளதோடு இது எங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு சான்றாகவும், உறுதியளிக்கும் விதமாகவும் இருப்பதுடன், தற்போதைய சூழலுக்கு ஏற்ற வணிக மூலோபாயத்தால் இது ஆதரிக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் எதிர்நோக்கக்கூடியதும் அதற்கு அப்பாலும் நிலைத்திருக்கும் வகையில் இது தொடரும்,” என்று குறிப்பிட்டார்.

நிலைபேறானது மற்றும் எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்தியுள்ளது

JAT Holdings PLC, தற்போதைய சவால்களை ஏற்றுக்கொண்டு, சாத்தியமான இடங்களில் அவற்றை வாய்ப்புகளாக மாற்றும். மேலும் இலங்கையில் அதிகரித்து வருகின்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தனது ஸ்தானத்தை பலப்படுத்துவதற்கும், எந்த சூழ்நிலைக்கும் முகங்கொடுத்து அதிலிருந்து வெளிவருகின்ற திறனுடன் இருப்பதற்கும், எதிர்காலத்தை மையமாகக் கொண்ட வணிக மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தும்.

வணிக மூலோபாயம் குறித்து கருத்து தெரிவித்த பிரதம நிறைவேற்று அதிகாரியான நிஷால் பேர்டினாண்டோ அவர்கள், “எந்த சூழ்நிலைக்கும் முகங்கொடுத்து, அதிலிருந்து வெளிவருகின்ற திறன் சார்ந்த வணிக மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கம், ஏற்றுமதி சார்ந்த மற்றும் சர்வதேச வணிகத்தை நோக்கியதாக காணப்படுவதுடன், ஏற்றுமதி வருவாயை வெகு விரைவிலும், இடைக் காலத்திற்குள்ளும் முடிந்தவரை விரிவுபடுத்தும் நோக்கில் முன்னோக்கிச் செல்வதாகும். அவ்வாறு செய்வது நிறுவனத்திற்கு ஸ்திரத்தன்மை மற்றும் சிறப்பாக செயல்படும் திறனை வழங்கும். உண்மையில், 2021/22 நிதியாண்டில் ஏற்றுமதி வருமானங்கள் குழுமத்தின் வருமானத்தில் 23% ஆக வளர்ச்சி கண்டுள்ளன, இது 12% ஆக மட்டுமே காணப்பட்ட முந்தைய ஆண்டை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்,” என்று குறிப்பிட்டார்.

இந்த மூலோபாயத்திற்கு உதவ, JAT Holdings PLC ஏற்கனவே பங்களாதேஷ் சந்தையில் புதிய அதிநவீன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழிற்சாலையை நிறுவுதல் மற்றும் உற்பத்தி தொழிற்சாலையை ஆரம்பித்தல் மற்றும் சில்லறை வர்த்தகச் சந்தையில் விரிவாக்கம் போன்ற பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது. மேலும், நிறுவனம் ஆபிரிக்காவில் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறது. அங்கு ஒரு தொழிற்சாலையை தொழிற்படச் செய்வதற்கான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. இவை ஒன்றுசேர, இந்த புதிய தொழிற்சாலைகள் பிராந்திய சந்தையில் நிறுவனத்தின் ஸ்தானத்தை மேலும் ஒருங்கிணைக்கும் அதே சமயத்தில் வருமானம் மற்றும் இலாப மட்ட வளர்ச்சிக்கு பங்களிக்கும். நிறுவனத்தின் பல்வேறுபட்ட செயற்திட்டங்களின் அடிப்படையில், JAT ஆனது இந்த பிரிவு இறக்குமதி கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஏனெனில் நிறுவனத்திடம் போதுமான கையிருப்புக்கள் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய செயற்திட்டங்கள் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை அல்ல, மேலும் அவை டொலருடன் நேரடியாக இணைக்கப்படுகின்றன. எனவே, இந்த செயல்பாடுகள் வழக்கம் போல் தொடரும்.

நெருக்கடி தணிப்பு

JAT Holdings PLC, இலங்கையின் பல்வேறு நெருக்கடிகளின் காரணமான வணிகத்தின் மீதான தாக்கங்களைத் தணிக்க தீவிரமான மற்றும் கணிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் விளக்கிய திரு. பேர்டினாண்டோ அவர்கள், “மிக முக்கியமாக, குறைந்த பட்சம் 6 முதல் 9 மாதங்களுக்கு போதுமான மூலப்பொருட்களை எங்களால் கையிருப்பில் வைத்திருக்க முடிந்துள்ளது தட்டுப்பாடு காரணமாக எந்த தடங்கலும் ஏற்படாமல் இருக்க, முடிந்தவரை எங்களின் மூலப்பொருட்களின் கையிருப்புக்களை அதிகரித்து வருகிறோம். மேலும், நிறுவனத்தின் நிதியியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதுடன், எங்களது ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையில் நாங்கள் திரட்டிய மூலதனமான, கிட்டத்தட்ட ரூபா 1.5 பில்லியன் தொகையானது, நமது கடன் செலவுகளை கணிசமாகக் குறைக்க உதவியது. இதனால் தேறிய நிதிச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. இது தற்போதைய நேரத்தில் எங்களுக்கு கணிசமான அளவில் நிவாரணம் அளித்துள்ளது. எதிர்காலத்தில், வருமான வளர்ச்சியை அதிகரிக்க சந்தைப் பங்கை முடிந்தவரை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவோம். அதே நேரத்தில் எங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழிற்சாலை வசதிகளைப் பயன்படுத்தி சிறந்த, சிக்கன விலையில் தயாரிப்புகள் மற்றும் பணத்திற்கு கூடுதல் மதிப்பை வழங்கும் தயாரிப்புகளை உருவாக்குவோம். நெருக்கடித் தணிப்பு என்பது நமது பணியாளர்களைக் கவனித்துக்கொள்வதையும் குறிக்கிறது. எனவே, இந்த கடினமான நேரத்தில் எங்கள் பணியாளர்களுக்கு ஒரு மேலதிக காப்பினை வழங்க உதவுவதற்காக, ஊழியர்களுக்கு ஒரு விரிவான நிவாரணப் பொதியை நாங்கள் முன்னெடுத்து வழங்கியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன

2021/22 நிதியாண்டிற்காக வரிக்குப் பிந்தைய இலாபமாக ரூபா 1.2 பில்லியனை வழங்குவதாக தனது ஆரம்ப பொதுப் பங்கு வழங்க*லின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதையும் நிறுவனம் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறது. மேலும், நிறுவனம் அதன் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கலின் பல்வேறு நோக்கங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. பங்களாதேஷில் அதன் அதிநவீன உற்பத்தி தொழிற்சாலையை நிர்மாணித்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்கும். இது திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. முன்மொழியப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழிற்சாலை வசதியும் சிறப்பாக முன்னேற்றம் கண்டு வருவதுடன், 2022 செப்டெம்பர் இறுதிக்குள் பூர்த்தியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022/23 நிதியாண்டில், JAT Holdings PLC ஏற்றுமதிச் சந்தைகளில் கவனம் செலுத்தி, ஆண்டு முழுவதும் அதன் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றுவதை உறுதிசெய்து, எந்த சூழ்நிலைக்கும் முகங்கொடுத்து அதிலிருந்து வெளிவர தயாராக உள்ளது. அதன் திறமையான முகாமைத்துவ அணி மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட அதன் வணிக மூலோபாயத்தால் வழிநடத்தப்பட்டு, நிறுவனம் தற்போது 2022/23 நிதியாண்டிலும் வலுவான பெறுபேற்றுத்திறனை வழங்குவதற்கான பாதையில் சிறப்பாகப் பயணித்து வருவது தென்படுகின்றது.

JAT Holdings தொடர்பான விபரங்கள்

1993 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து, JAT Holdings இலங்கையில் மர பூச்சுகளுக்கான சந்தை முன்னோடியாகவும், நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. தொடர்ந்து நான்கு வருடங்களாக LMD சஞ்சிகையால் இலங்கையின் ‘சிறந்த 100 மிகவும் மதிக்கப்படும் நிறுவனங்களில்’ ஒன்றாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன், Brand Finance இன் ‘சிறந்த 20 கூட்டு நிறுவன வர்த்தகநாமங்கள்’ மத்தியில் தரவரிசைப்படுத்தப்பட்டமை போன்ற அங்கீகாரங்களால் இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை வரை, JAT Holdings, தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக Moody இன் ICRA ‘A+ Stable’ கடன் தர மதிப்பீட்டைப் பெற்ற இலங்கையின் ஒரேயொரு தனியார் நிறுவனமாகத் திகழ்ந்துள்ளது.