Back to Top

36 மணி நேரத்தில் 3 ரொக்கெட்டுகள்...

36 மணி நேரத்தில் 3 ரொக்கெட்டுகள்...

June 21, 2022  09:57 am

Bookmark and Share
உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி தொடர்பான பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது அந்த நிறுவனம் 36 மணி நேரத்தில் 3 ரொக்கெட்களை விண்ணில் ஏவி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு ஜனவரி மாதமும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக 3 ரொக்கெட்டுகளை விண்ணில் ஏவி சாதனை படைத்து இருந்தது.

தொலைத்தொடர்பை மேம்படுத்துவதற்காக புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவெரல் விண்வெளிப் நிலையத்தில் இருந்து நேற்று தொலைத்தொடர்பு செயற்கைக் கோளுடன் ´பால்கன் 9´ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

புறப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ரொக்கெட்டின் முதல் நிலை ஸ்பேஸ்எக்ஸ் ட்ரோன்ஷிப்பில் செங்குத்தாக தரையிறங்கியது. ரொக்கெட்டில் இருந்து பிரிந்து பயணித்த செயற்கைக் கோள், திட்டமிட்டபடி ஒரு மணி 50 நிமிடங்களில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.