Back to Top

DFCC வங்கி Mastercard கொடுப்பனவு நுழைமுகத்தினூடாக இலத்திரனியல் முறையில் பணம் செலுத்துவதற்கு இடமளிக்க Mastercard உடன் ஒத்துழைக்கிறது

DFCC வங்கி Mastercard கொடுப்பனவு நுழைமுகத்தினூடாக இலத்திரனியல் முறையில் பணம் செலுத்துவதற்கு இடமளிக்க Mastercard உடன் ஒத்துழைக்கிறது

June 21, 2022  04:32 pm

Bookmark and Share
இலங்கையில் வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, இணையத்தின் ஊடாக பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதற்கும் இலத்திரனியல் முறையில் பணக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் தனது கொடுப்பனவு நுழைமுகத்தில் Mastercard ஐ செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. Mastercard கொடுப்பனவு நுழைமுகம் செயல்படுத்தப்படுவது வங்கியின் டிஜிட்டல் சேவை இடமளிப்பு முயற்சியில் மற்றொரு சாதனை இலக்காகும். டிஜிட்டல் பொருளாதாரத்தை நாடு அதிகரித்துச் செல்லும் அளவில் உள்வாங்கி வருவதால், வங்கியானது டிஜிட்டல் மாற்ற உள்வாங்கலை தொடர்ந்து முன்னெடுப்பதுடன், வங்கிச் சேவைத் துறையில் தீவிரமாக பங்களித்து வருகிறது.

பல்வேறு விலைமதிப்புகளுடன் தங்கள் தயாரிப்புகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் நுண், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வணிகங்களுக்கு இந்தச் சேவை கிடைப்பதால், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கான அவற்றின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு இது இடமளிக்கின்றது. Mastercard கொடுப்பனவு நுழைமுகமானது, நுண்-வணிகங்கள் வழக்கமான முறையில் பரிவர்த்தனை செய்யும் தளங்கள் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதை ஏற்கும். இது ஒவ்வொரு வணிகத்திற்கும் சேவை வழங்குவதை பிரத்தியேகமாக வடிவமைத்துக் கொள்ள வங்கிக்கு இடமளிப்பதுடன், வசதியாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் அதே வேளையில் உள்ளார்ந்த இடர்களை இறுக்கமாக கட்டுப்படுத்தி நிர்வகிக்க வழிவகுக்கும்.

DFCC வங்கியால் கொடுப்பனவு நுழைமுக சேவை அமுல்படுத்தப்படுவது தொடர்பில் DFCC வங்கியின் சில்லறை வங்கிச் சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைப் பிரிவுகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்து வெளியிடுகையில், “அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற வகையில், பரந்த அளவிலான கொடுப்பனவுத் தெரிவுகளுடன் நம்பகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் கொடுப்பனவு உள்கட்டமைப்புக்கான முக்கிய தேவை இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மின் வர்த்தகச் சேவைகளுக்கு இடமளிக்க எங்கள் வணிகர் வலையமைப்பிற்கு வலுவூட்டுவதற்காக, மிகவும் பிரபலமான கொடுப்பனவுச் செயலிகளில் ஒன்றாக இருக்கும் Mastercard கொடுப்பனவு நுழைமுக சேவைகளுடன் இந்த ஒத்துழைப்பில் நாங்கள் காலடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது வாடிக்கையாளர்கள், தொழில்துறை கூட்டாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு சௌகரியத்தைக் கொடுக்கும் என்றும், இலங்கை முழுவதும் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

இந்த ஒத்துழைப்பின் மூலம், DFCC வங்கியானது, சேவை வழங்குநர்களுடன் கூட்டுசேர்வதன் மூலமும், வளர்ந்து வரும் சந்தைப் பிரிவுகளில் ஊடுருவுவதன் மூலமும் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த Mastercard இன் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முகாமையாளரான சந்துன் ஹபுகொட அவர்கள், “DFCC வங்கியுடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்வதற்கும், டிஜிட்டல் வழிமுறை கொடுப்பனவுகளின் புதிய உலகில் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கு அவர்களின் அணுகல் மற்றும் பாதுகாப்பிலிருந்து பயனடைவதற்கும் உதவுகிறது. Mastercard நிறுவனத்தில், வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையற்ற, பாதுகாப்பான மற்றும் அட்டையை உட்புகுத்தும் எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவையற்ற அனுபவத்தை வழங்கும் சிறந்த வகுப்பிலான தீர்வுகள் மற்றும் கொடுப்பனவு முறைகளை அறிமுகம் செய்வதில் நாம் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

புதிதாக செயல்படுத்தப்பட்ட Mastercard கொடுப்பனவு நுழைமுகமானது மின்வணிக இணையதளங்கள் அல்லது மொபைல் செயலிகளுடன் தங்குதடையற்ற ஒருங்கிணைப்பை வழங்கும் அதிநவீன மேம்பட்ட பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று ‘எளிமைப்படுத்தப்பட்ட வர்த்தக’ சேவையாகும், இது வணிகரின் இணையதளம் அல்லது Mastercard கொடுப்பனவு நுழைமுகத்துடன் கணக்கை ஒருங்கிணைக்க தங்குதடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் இடமளிக்கிறது. இந்த சிறப்பம்சம் நுண், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் தங்கள் தொழிற்பாட்டுச் செலவைக் குறைக்க உதவுவதுடன், அவர்களின் வணிகத்திற்கு உண்மையில் என்ன முக்கியம் என்பதில் கவனம் செலுத்துகிறது. இது 3DS 2.0 (EMV 3DS) தீர்வுகளான சமீபத்திய 3D வழிமுறை பாதுகாப்பான கொடுப்பனவுகளுக்கு இடமளிக்கிறது. இது அட்டையை எந்திரத்தில் உட்செருக வேண்டிய தேவையற்ற நுகர்வோர் அங்கீகாரத்தை ஊக்குவிக்கிறது. இணைய பரிவர்த்தனையின் போது அட்டைதாரர்கள் தங்கள் அட்டை வழங்குனருடனான தமது அங்கீகாரத்தை வழங்க உதவுகிறது.

கூடுதல் பாதுகாப்பு அடுக்கு அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைத் தடுக்க உதவுகிறது மற்றும் மோசடி வெளிப்பாடுகளிலிருந்து வணிகத்தைப் பாதுகாக்கிறது. இந்தச் சேவையானது WooCommerce, OpenCart, Prestashop, Magento மற்றும் பல்வேறு பிரபலமான பயன்பாடுகளுக்கு உதவுவதுடன், மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படுகின்ற கொடுப்பனவுகளின் போது, அதற்கு முந்தைய பயன்பாட்டின் போதான தரவு விபரங்களைத் தானாகவே கண்டறிந்து கொள்ளும் தீர்வுடன். Android Point of Sale (PoS) இயந்திரங்களை நேருக்கு நேராகப் பணம் செலுத்தும் வகையில் இணைக்கப்பட்டிருக்கும் புத்தாக்கமான இடப்பரப்பில் Mastercard கொடுப்பனவு நுழைமுகமானது அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வருகிறது.

வணிகங்கள் நிகழ்நேரத்தில் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் அறிக்கைகளை உருவாக்கவும் இலகுவான பயன்பாட்டு பணியகத்துக்கான அணுகலைக் கொண்டிருக்கும்.

இதனால் அவர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணங்கள் பற்றிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவும், நிதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இடமளிக்கும். Mastercard கொடுப்பனவு நுழைமுகம் விரைவான மற்றும் சிக்கல் இல்லாத செயலாக்கத்திற்காக பெரும்பாலான இணைய பயன்பாடுகளுடன் தங்குதடையின்றி ஒருங்கிணைக்கிறது.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்    

DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2030, பசுமை பேணும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable தரப்படுத்தல் மற்றும் Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable தரப்படுத்தல் ஆகியவற்றையும் பெற்றுள்ளது.