
நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில்...
June 22, 2022 09:35 am
பிரபல டிவி நடிகை ஸ்ரீநிதி மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7சி தொடரின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீநிதி. பின்னர் ஜி தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, புதுப் புது அர்த்தங்கள் தொடர்களில் நாயகியாக நடித்தார்.
இந்த நிலையில் கடந்த சிம்பு தன்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என அவரது வீட்டின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு தன்னை திருமணம் செய்துகொள்வதற்காகவே திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக அவர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மன அழுத்தத்தில் இருப்பதாக அவரது அம்மா தெரிவித்திருந்தார். தற்போது ஸ்ரீநிதி மன அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.