
ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு பிணை
June 22, 2022 05:05 pm
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 28ஆவது சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிக்கையளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
உத்தரவாததாரர்கள் தங்களுடைய இருப்பிடம் மற்றும் சொத்துக்கள் குறித்த சான்றிதழ்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.