
பிரிட்டனில் அதிர்ச்சித் தகவல்!
June 23, 2022 10:17 am
பிரிட்டன் மற்றும் வேல்ஸில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு கருக்கலைப்புகள் உயர்ந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 215,000 பேர் கருக்கலைப்புகள் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார மேம்பாட்டுத் துறை அலுவலகத்தின் அறிக்கையின்படி, சுகாதார தரவுகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலேயே கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், அஞ்சல் மூலம் மாத்திரை பெரும் திட்டம் மிகவும் பிரபலமாக இருந்ததால், மருத்துவர்களை நேரில் சந்திக்க இயலாத பல பெண்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்தியாக கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சர்கள் இந்த திட்டத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், இதனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
பிரிட்டிஷ் கர்ப்ப ஆலோசனை சேவையின் தலைவரான கிளேர் மர்பி, கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட கருக்கலைப்பு எண்ணிக்கையில் இந்த கொள்கை திட்டத்துக்குப் பங்கு இருந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தார்.
கொரோனா தொற்றுநோய் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் வகையில் அரசு ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், பெண்களின் கர்ப்பத் தேர்வுகளில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.