
அரிசி விற்பனையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு
June 23, 2022 04:52 pm
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 186 வர்த்தகர்களுக்கும், விலையை காட்டாமல் அரிவி விற்பனை செய்த மற்றும் அரிசியை விற்பனை செய்ய மறுத்த 479 வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 22 குற்றவாளிகளுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் சுமார் 3.2 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அதிகபட்ச சில்லறை விலைக்கு ஏற்ப அரிசியை கொள்முதல் செய்து விற்பனை செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.