
நாட்டில் இருந்து வௌியேறிய இந்திய பிரதிநிதிகள் குழு
June 23, 2022 06:11 pm
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா உள்ளிட்ட குழுவினர் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய இருதரப்பு உதவிகள் தொடர்பிலான ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்ட அவர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
இந்திய நிதி அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் திணைக்களத்தின் செயலாளர் அஜய் சேத், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி. ஆனந்த நாகேஸ்வரன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே ஆகியோர் இந்த விஜயத்தின் போது வெளியுறவு செயலாளருடன் இணைந்து வருகை தந்திருந்தனர்.
இந்த விஜயத்தின் போது இந்தியத் தூதுக்குழுவினர் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.