
வெளிவிவகார அமைச்சின் விசேட அறிவிப்பு
June 23, 2022 09:26 pm
வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தூதரக விவகாரப் பிரிவு வளாகத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தூதரக விவகாரப் பிரிவு நாளை (24) 400 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே சேவைகளை வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.