
கொமர்ஷல் வங்கி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு Autoclaves இயந்திரங்களை நன்கொடையாக வழங்குகிறது
June 28, 2022 03:10 pm
கொமர்ஷல் வங்கி அண்மையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நுண்ணுயிரிகள் மற்றும்
வித்திகளைக் கொல்லும் வகையில் அதிக வெப்பமான நீராவியை உருவாக்குவதற்கு நீர் அழுத்தம்
மற்றும் வெப்பத்தைப் பயன்படுத்தும் இரண்டு அழுத்த அனற்கல (Autoclaves) இயந்திரங்களை
வழங்கியது. வைத்தியசாலையின் கோரிக்கைக்கு இணங்க இவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த அலகுகள் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கில் தொற்றுக் கட்டுப்பாட்டுக்காகப்
பயன்படுத்தப்படும். யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பிரதேசத்தில் சுமார் 150,000 பேருக்கு
பருத்தித்துறை மருத்துவமனை ´வகை ஏ´ அடிப்படை வைத்தியசாலையாக சேவையாற்றி வருகின்றது.
கொமர்ஷல் வங்கியின் பிராந்திய முகாமையாளர் வடக்குரூபவ் திரு ராமச்சந்திரன் சிவஞானம்
(இரண்டாவது வலது) மற்றும் கொமர்ஷல் வங்கியின் பருத்தித்துறை கிளையின் முகாமையாளர் திரு
தேவராஜா அரவிந்தன் ஆகியோர் வைத்தியசாலையின் பிரதிநிதிக்கு ஆட்டோகிளேவ்கள் வழங்குவதை
படத்தில் காணலாம்.