
துப்பாக்கிச் சூடு நடந்த விதம் - CCTV காட்சிகள்!
June 29, 2022 04:24 pm
மொரட்டுவ, கட்டுபெத்த சந்தியில் இன்று (29) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் பாணந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ரி56 ரக துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
“குடு சலிந்து” என்பவரின் ஆதரவாளர்களே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்ற விதம் குறித்த சிசிடிவி காட்சிகள் இதோ,