Back to Top

தப்பியோடிய 232 கைதிகள் கைது!

தப்பியோடிய 232 கைதிகள் கைது!

June 29, 2022  05:57 pm

Bookmark and Share
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு தப்பிச் சென்ற 232 கைதிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்தமையால் நேற்று இரவு முதல் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று (29) காலை சுமார் 600 கைதிகள் புனர்வாழ்வு மையத்தின் இரண்டு பிரதான வாயில்களை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மரணம் தொடர்பில் யாரேனும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.