Back to Top

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வௌியிட்டு அறிக்கை!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வௌியிட்டு அறிக்கை!

June 29, 2022  07:02 pm

Bookmark and Share
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வியாழன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் மூடப்படவுள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

நிலவும் எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு அதன் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சாரதி அனுமதி பத்திரம் புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்காக மாத்திரம் இணையவழி ஊடாக திகதிகளை ஒதுக்கிக்கொண்டவர்களுக்காக வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் கம்பஹா, அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்கள் வியாழக்கிழமை திறந்திருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.