Back to Top

Commonwealth Games - முதல் பதக்கம்!

Commonwealth Games - முதல் பதக்கம்!

July 30, 2022  08:25 am

Bookmark and Share
இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் நடைபெறும் 22 ஆவது கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை இங்கிலாந்து வென்றது.

ஆடவருக்கான டிரையத்லான் பிரிவில் அந்நாட்டின் அலெக்ஸ் யீ, பந்தய இலக்கை 50 நிமிஷம் 34 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தாா். நியூஸிலாந்தின் ஹெய்டன் வைல்டு 13 விநாடிகள் தாமதமாக வந்து வெள்ளியும், அவரை விட 3 விநாடிகள் பின்தங்கிய ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹௌசா் வெண்கலமும் பெற்றனா்.