
கனமழையால் 320 பேர் பலி
August 1, 2022 08:43 am
பாகிஸ்தானில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 320 ஐத் தொட்டது.
மழை, வெள்ளத்தால் பலூசிஸ்தான் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த மாகாணத்தில் மட்டும் கனமழை காரணமாக இதுவரை 127 போ் பலியாகியுள்ளனா். ஜூன் மாத மத்தியிலிருந்து பெய்து வரும் இந்த கனமழையால் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.