Back to Top

 விலை உயர்வு குறித்து பிரதமருக்கு சிறுமி எழுதிய கடிதம்!

விலை உயர்வு குறித்து பிரதமருக்கு சிறுமி எழுதிய கடிதம்!

August 2, 2022  12:57 pm

Bookmark and Share
விலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் துயரங்கள் குறித்து ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்புப் படித்து வரும் க்ருத்தி துபே, பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்,

எனது பெயர் க்ருத்தி துபே. நான் முதலாம் வகுப்புப் படிக்கிறேன். மோடிஜி, நீங்கள் அதிக விலைவாசி உயர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இதனால் எனது பென்சில் மற்றும் அழிப்பான் (ரப்பர்) கூட விலை அதிகரித்துவிட்டது. அது மட்டுமல்ல மேகி நூடுல்ஸ் விலையும் அதிகரித்துவிட்டது. நான் தற்போதெல்லாம் பென்சில் கேட்டால் எனது தாயார் என்னை அடிக்கிறார். நான் இப்போது என்னதான் செய்வது? மற்றவர்கள் எனது பென்சிலை திருடிவிடுகிறார்கள் என்று முத்துமுத்தான கையெழுத்தில் ஹிந்தியில், தனது நோட்டுப் புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கிழித்து எழுதியுள்ளார்.

இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது.

இது குறித்து, அவரது தந்தை விஷால் துபே என்ற வழக்குரைஞர் கூறுகையில், இது எனது மகளின் மனதின் குரல். பாடசாலையில் பென்சிலை தொலைத்துவிட்டு வந்ததற்கு, அவரது தாயார் திட்டியதால் மிகவும் வேதனை அடைந்தார் என்றும் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளத்தில் இந்தக் கடிதத்தைப் பார்த்த சிபிரமௌ மாவட்ட நீதிபதி அசோக் குமார், இந்தச் சிறுமிக்கு எந்த வகையிலும் உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன், இந்தக் கடிதம் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Most Viewed