Back to Top

டி20 துடுப்பாட்ட தரவரிசை!

டி20 துடுப்பாட்ட தரவரிசை!

August 4, 2022  11:30 am

Bookmark and Share
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிக்கான துடுப்பாட்ட தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று (03) வெளியிட்டுள்ளது.

ஆண்களுக்கான டி20 துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2 இடங்கள் முன்னேறி 816 புள்ளிகளுடன் 2 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 ஓட்டங்கள் குவித்ததால் அவர் 2 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப் 10 இடத்திற்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தலைவர் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். 3 வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 794 புள்ளிகளுடன் உள்ளார்.

Most Viewed