Back to Top

3 ஆவது எல்பிஎல் போட்டித்தொடர் டிசம்பரில் திட்டமிடப்பட்டுள்ளதுடன், பொருளாதாரம் மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தவுள்ளது

3 ஆவது எல்பிஎல் போட்டித்தொடர் டிசம்பரில் திட்டமிடப்பட்டுள்ளதுடன், பொருளாதாரம் மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தவுள்ளது

August 4, 2022  03:23 pm

Bookmark and Share
முதலில் 2022 ஆகஸ்ட்டில் திட்டமிடப்பட்டு, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) 2022 போட்டித்தொடரானது 2022 டிசம்பருக்கு மீள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. எல்பிஎல் 2022 ஐ ஆண்டின் இறுதிக்கு நகர்த்துவதற்கான முடிவு இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் போட்டியின் உரிமையாண்மையைக் கொண்டுள்ள IPG Group ஆகியவற்றால் கூட்டாக எடுக்கப்பட்டது. கலந்துகொள்ள உள்ளவர்களின் வருகையை அதிகரிக்கவும் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு சிறந்த சாதகமான பலனை வழங்கவும் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

IPG Group ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட எல்பிஎல், டி20 வடிவ கிரிக்கெட்டுக்கான இலங்கையில் ஒரு தொழில்முறை கிரிக்கெட் லீக் ஆகும். இந்த போட்டி ஆண்டுதோறும் விளையாடப்படுகிறது. இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் ஒரு தளமாக எல்பிஎல் 2022 ஐப் பயன்படுத்த IPG Group எண்ணியுள்ளது. அதே நேரத்தில் கடினமான காலங்களில் நேர்மறை சிந்தனை மற்றும் வதனங்களில் புன்னகையையும் பரப்புகிறது.

எல்பிஎல் 2022 இன் மீள்அட்டவணையைப் பற்றி கருத்து வெளியிட்ட விவாதித்த IPG Group இன் பணிப்பாளர் சபைத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அனில் மோகன், “எல்பிஎல் 2022 இலிருந்து இலங்கைக்கு அதிகபட்ச பலன் மற்றும் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச நேர்மறையான விளைவை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். ஆகவே போட்டிகளை இப்போதே நடாத்துவது அந்த இலக்கிற்கு முட்டுக்கட்டையாக அமையும் என்று நாங்கள் நினைக்கிறோம். டிசம்பரில், நிலைமை இன்னும் சீராக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் வெளிநாட்டு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்பதுடன் வீரர்கள் தங்கள் சொந்த குடும்பத்தினரையும் நண்பர்களையும் எந்த சிரமமும் இல்லாமல் அழைத்து வர முடியும். மேலும், இது போன்ற பிரமாண்டமான நிகழ்வொன்றை ஒருங்கிணைப்பது ஒரு பெரிய ஏற்பாட்டு முயற்சியாகும். மேலும் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் விரும்புகிறோம், எனவே டிசம்பர் வரை இதற்கு அவகாசம் மற்றும் இடமளிப்பது சிறந்தது. மேலும், இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்களுடன், எல்பிஎல் இன் உற்சாகத்திலிருந்து யாரும் விலகியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, டிசம்பரில் ஒரு சிறந்த எல்பிஎல் போட்டியை எதிர்பார்க்கிறோம். இது எதிர்பார்க்கப்படும் அனைத்து உற்சாகத்தையும் அளிக்கும். மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களின் பரந்த அளவிலான பங்கேற்பிற்கும் இடமளிக்கும்,” என்று குறிப்பிட்டார்.

போட்டிக்கான வீரர்கள் மற்றும் அணிகள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டன, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த தொடருக்கு முன்னதாக, உத்தியோகபூர்வ வீரர் வரைவு 2022 ஜூலை 5 அன்று வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த வனிது ஹசரங்க, திசர பெரேரா மற்றும் இசுரு உதான போன்ற உள்ளூர் வீரர்களும், சொயிப் மலிக், இமாத் வாசிம், ஆசிப் அலி, டுவைன் பிரிட்டோரியஸ், எவின் லூயிஸ் மற்றும் டெவால்ட் ப்ரீவிஸ் போன்ற சர்வதேச வீரர்களும் இந்தப் போட்டியில் விளையாட உள்ளனர்.

எல்பிஎல் 2022 இன் போட்டிப் பணிப்பாளர் சமந்த தொண்டன்வெல அவர்கள் இது தொடர்பில் மேலும் கூறுகையில், “லங்கா பிரீமியர் லீக் 2022 எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலை காரணமாக மீள்அட்டவணைப்படுத்தப்பட்டாலும், நாட்டில் ஒரு சிறந்த மற்றும் மேம்பட்ட பொருளாதார சூழலுக்குள் புதிய அட்டவணையுடன் நாங்கள் போட்டியை நடத்த முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இச்சூழல் போட்டியை நடத்த எங்களுக்கு இடமளிப்பதுடன், இது எங்கள் ரசிகர்களை ஈர்க்கும் என்பதுடன், எங்கள் வீரர்கள் தமது திறமைகளை காண்பிக்க சிறந்த தளத்தையும் அமைக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

எல்பிஎல் 2022 க்கான புதிய திகதிகள் மற்றும் ஏற்பாடுகள், நேரடி ஒளிபரப்பு மற்றும் நேரலைக்கான ஏற்பாடுகளுடன் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். IPG Group மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை, இந்த விடயத்தில் பொறுமை மற்றும் புரிந்துணர்வுக்காக அனைத்து பங்குதாரர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றது.

IPG Group தொடர்பான விபரங்கள்

50 வருட கூட்டு அனுபவத்துடன், IPG Group, உலகிற்கு விளையாட்டு நிகழ்வுகளைக் காண்பிக்கப்படும் விதத்தில், விளையாட்டுத் திறனை நோக்கி தொடர்ந்து புத்தாக்கங்களை தோற்றுவித்து வருகிறது. விளையாட்டு உலகில் ஒரு ஒருங்கிணைந்த செயல்பாட்டாளராக IPG அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் விளையாட்டு மற்றும் கழக மட்ட முகாமைத்துவம், நேரடி விளையாட்டு ஒளிபரப்பு, கழக மட்ட உரிமை விற்பனை மற்றும் அனுசரணைகள், விளையாட்டு சந்தைப்படுத்தல், மைதான அனுசரணை, டிஜிட்டல் மற்றும் ஒளிபரப்புக்கான ஊடக உரிமைகள், ஊடக விநியோக சேவைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் வெளிச்செல்வதற்கான வான் வாடகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறது. IPG Group ஆனது 250 க்கும் மேற்பட்ட செயல்திட்டங்களை நிறைவு செய்துள்ளதுடன், மேலும் 50 இற்கும் மேற்பட்ட நகரங்களில் 50 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்காக 300 இற்கும் மேற்பட்ட வீடியோக்களை படமாக்கி தயாரித்துள்ளது.

Most Viewed