
தொடர்ந்து மூன்றாவது வருடமாக தனது 'ஒட்டுமொத்த கார்ட் அடிப்படையிலான சிறந்த செயற்பாட்டு' வங்கியாக கொமர்ஷல் வங்கியை தெரிவு செய்துள்ளது
August 5, 2022 10:39 am
தெற்காசியாவின் மிகப் பெரிய இலத்திரனியல் வர்த்தக மேடையான டராஸ் இன் ´கொடுப்பனவு பங்காளி
செயற்பாட்டு விருது 2022´ நிகழ்வின் போதுரூபவ் ´ஒட்டுமொத்த கார்ட் அடிப்படையிலான சிறந்த
செயற்பாட்டு´ வங்கியாக கொமர்ஷல் வங்கி தொடர்ந்து மூன்றாவது வருடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
2021-2022 நிதி ஆண்டு காலப்பகுதியில் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் தளங்கள் மூலம் ஆகக்
கூடுதலான அளவு கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொடுத்தமை மற்றும் பெருமளவு சிறந்த கொள்வனவாளர்களை
டராஸ் இணைய மேடைக்குப் பெற்றுக் கொடுத்தமை என்பனவற்றுக்காக இந்த கீர்த்திமிக்க விருது
வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வென்றுள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கி கொமர்ஷல்
வங்கியாகும்.
ஜனவரி 2021 முதல் இன்று வரை டராஸுடன் இணைந்து கொமர்ஷல் வங்கி 18 கார்ட் ஊக்குவிப்புத் திட்டங்களை
முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் வங்கியின் பெருமளவான வாடிக்கையாளர்கள் இணையவழி கொடுப்பனவில்
ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். இதன் ஊடாக விருதின் மதிப்பீட்டுக்குரிய ஆண்டில் பெருமளவான
கொடுப்பனவும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வருட கால கார்ட் ஊக்குவிப்புக்கள் தனது
வடிக்கையாளர்களுக்கு சிறப்பான நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் தனது வாத்தகப்
பங்காளிகளுடன் கௌரவமான உறவுகளைப் பேணும் விதத்திலும் வங்கியால் வடிவமைக்கப்பட்டவை.
2021-22 காலப் பகுதியில் டராஸ் மேற்கொண்ட இணையவழி ஊக்குவிப்புக்களின் போது கொமர்ஷல்
வங்கி கார்ட்டுகளே பெருமளவான விற்பனையைப் பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதில்
டராஸ் 11.11 மற்றும் டராஸ் 12.12 என்பனவும் அடங்கும். இவை தான் இலங்கையின் மிகப் பெரிய
இணையவழி பொருள் கொள்வனவு கொண்டாட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தப் புதிய விருது பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கி கார்ட் மையத்தின் பிரதான
முகாமையாளர் நிஷான்த டி சில்வா ´டராஸ் போன்ற மேடைகள் இணையத்தள வர்த்தகத்தின் இன்றைய மற்றும்
எதிர்காலத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அது கொமர்ஷல் வங்கி மக்கள் மத்தியில்; இணைய மற்றும்
டிஜிட்டல் வங்கிப் பாவனை தொடர்பான பிரபலத்தை உருவாக்க மேற்கொண்டு வரும் தனக்கே உரிய
செயற்பாடுகளையும் பிரதிபலிக்கின்றது. டராஸுக்கான இந்த செயற்பாடுகளின் உறுதியான
அதிகரிப்பு எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. எதிர்காலத்திலும் புதுமையான பல
கண்டுபிடிப்புக்களோடு தொடர்ந்தும் நாம் அவர்களோடு இணைந்து பணியாற்ற எண்ணியுள்ளோம்´
என்றார்.
இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கிரூபவ் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில்
தொடர்ந்தும் 12 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கி கொமர்ஷல் வங்கியாகும்.
கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 268 கிளைகள் மற்றும் 940 தானியங்கி இயந்திரங்களை
கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு
பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில்
உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 19 கிளைகளை
இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது: