
காணாமல் போன சிறுவன் கண்டுபிடிப்பு
August 5, 2022 02:52 pm
தலதா பெரஹெராவிற்கு வருகை தந்து காணாமல் போன சிறுவன் ஒருவனை பொலிஸார் மஹரகம பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு சந்தேகப்படும்படியாக சிறுவனை அழைத்து வந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த சிறுவனும் குறித்த நபரும் நேற்றிரவு அவிசாவளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் பயணித்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் 09 வயதுடையவர் எனவும் சந்தேகநபர் 30 வயதுடைய பேராதனை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலப்பிட்டி தலவத்துஓயா பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன், கடந்த 3 ஆம் திகதி ஸ்ரீ தலந்த பெரஹெராவைக் காண்பதற்காக தனது பெற்றோருடன் கண்டிக்கு வந்திருந்தார்.
அங்கு பெற்றோருக்கு தெரிவிக்காமல் சந்தேக நபர் சிறுவனை கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்.
குறித்த சிறுவனின் பெற்றோர், சிறுவனை காணவில்லை என கண்டி பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.