
கோட்டா கோ கம தொடர்பில் சட்டமா அதிபர் வழங்கியுள்ள உறுதி
August 5, 2022 03:02 pm
உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் காலி முகத்திடல் ´கோட்டா கோ கம´ போராட்டப் பகுதியில் உள்ள சட்டவிரோத கூடாரங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அகற்றுவதைத் தவிர்ப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
இதன்படி, இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதிக்குள் இந்த அனுமதியற்ற கூடாரங்களை அகற்றுவது தொடர்பான ஆரம்ப சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு எந்த தடையும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தாமாக முன்வந்து பிரதேசத்தை விட்டு வெளியேற விரும்புபவர்கள் வெளியேறுவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.