
எரிபொருள் பவுசர் மோசடியில் ஈடுபட்ட சிரேஷ்ட அதிகாரிகள்!
August 6, 2022 02:38 pm
முத்துராஜவெல பெற்றோலிய முனையத்தில் இருந்து கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்காககொண்டு செல்லப்பட்ட எரிபொருள் பவுசரை மீகொட பிரதேசத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்களை மெகொட பொலிஸார் கடந்த தினம் கைது செய்திருந்தனர்.
இவர்களில் இரண்டு பெரிய தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முத்துராஜவெல பெற்றோலிய முனையத்தின் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மோசடிக்கு தலைமை தாங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மீகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மண்ணெண்ணெய் இல்லாமல் தமது தொழில் முடங்கியுள்ளதாக தெரிவித்து காலி மீனவர்கள் இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.