Back to Top

 புனித பீட்டர் கல்லூரி வெற்றி

புனித பீட்டர் கல்லூரி வெற்றி

August 6, 2022  07:03 pm

Bookmark and Share
பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரிக்கும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரிக்கும் இடையில் இன்று நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் புனித பீட்டர் கல்லூரி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பீட்டர் கல்லூரி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை மாத்தரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி, புனித பீட்டர் கல்லூரி 26 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.