
இ.மி.ச மறுசீரமைப்பு குழுவிற்கு பொறுப்புகள் ஒப்படைப்பு
August 6, 2022 08:07 pm
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு குழு உறுப்பினர்களிடம் குறித்த பொறுப்பு நேற்று (05) ஒப்படைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதன்படி, பல்வேறு அபிவிருத்தி நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதரவுடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகள் ஒரு மாதத்திற்குள் வழங்கப்பட உள்ளன.
அந்தக் குழுவில் உறுப்பினர்கள் கீழே...
நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி ஆர். எச். எஸ் சமரதுங்க
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் எம். எம். சி. பெர்டினெண்டோ
இலங்கை மின்சார சபையின் முன்னாள் மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேரா
முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர் திலான் விஜேசிங்க
பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் துறைமுக நகர பொருளாதார ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம்
சாலிய விக்கிரமசூரிய
பொது நிறுவனங்கள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன
சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட சட்ட அதிகாரி சட்டத்தரணி ஹர்ஷ பெர்னாண்டோ
மின்சார அமைச்சின் பணிப்பாளர் சந்தன விஜேசிங்க.