Back to Top

திருமலையில் பதற்ற நிலை

திருமலையில் பதற்ற நிலை

March 20, 2017  

Bookmark and Share
கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்தில் இன்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது.

ஏற்கனவே பல்கலைகழகத்தினுள் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 16 மாணவர்களை பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் தடை விதித்திருந்தது.

ஆனாலும் அவர்களையும் பரீட்சைக்கு உள்வாங்கக் கோரி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பரீட்சையை பகிஷ்கரித்தனர்.

ஆனாலும் புதிய 13 மாணவர்கள் நிலுவை உள்ள 4மாணவர்கள் உட்பட 17 மாணவர்களும் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த மற்ற மாணவர்களால் வகுப்பறை அடித்து நொறுக்கப்பட்டது.

டயர்களும் கொழுத்தப்பட்டன. திருமலை வளாக நிர்வாகத்தால் அழைக்கப்பட்ட திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்ட பொலிஸாரினால் சுமுகமான நிலைமை ஏற்படுத்தப்பட்டது