Back to Top

அன்னம்மாள் ஆலய 137 வது ஆண்டுவிழா

அன்னம்மாள் ஆலய 137 வது ஆண்டுவிழா

July 16, 2017  

Bookmark and Share
ஹட்டன் புனித அன்னம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கண்டி மறை மாவட்ட ஆயர் ஜோசப் வியானி பெர்னான்டோ தலைமையில் இன்று (16) வெகு சிறப்பாக நடைபெற்றது

137 வது ஆண்டு கொண்டாடப்படும் புனித அன்னம்மாள் திருவிழா அருட் தந்தை லெஸ்லி பெரேரா மற்றும் உதவி அருட்தந்தை ஸ்டீபன் ஆகியோரின் மூம்மொழி விசேட ஆராதணையின் பின் திருசுருவம் ஊர்வலம் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.

ஹட்டன் நகர மணிக்கூடு வழியாக பிரதான நகரினூடாக மல்லியப்பு சந்திவரை சென்று மீண்டும் ஆலயத்தை சென்றது

புனித அன்னம்மாள் திருவிழாவில் அட்டன் பிரதேச சர்வ மத தலைவர்கள் உட்பட பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்

(அத தெரண நிருபர்)