Back to Top

சயிடமுக்கு எதிராக..

சயிடமுக்கு எதிராக..

September 12, 2017  

Bookmark and Share
சயிட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கினிகத்தேன அம்பமுவயிலிருந்து பதுளை வரையிலான வாகன பேரணி இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.

மக்கள் விடுதலை முன்னணியின் பதுளை மாகாணசபை உறுப்பினர் சமந்த விஜேரத்ன, மக்கள் விடுதலை முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் மஞ்சுல சுரவீர ஆகியோர் தலைமையிலே எதிர்ப்பு வாகன பேரணி ஆரம்பமாகியது.

வாகன பேரணியாது கினிகத்தேன ஹட்டன் கொட்டகலை தலவாக்கலை நுவரெலியா வெளிமடை வழியாக பதுளையை சென்றடைய உள்ளதுடன் பேரணியின் போது பொது மக்களுக்கு சயிட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.

(அத தெரண நிரூபர்)

Most Viewed