Back to Top

380 கிலோ உருளைக் கிழங்கு கேக்

380 கிலோ உருளைக் கிழங்கு கேக்

April 16, 2018  

Bookmark and Share
நுவரெலியா கிரேன் விருந்தகத்தின் ஏற்பாட்டில் 380 கிலோகிராம் எடை கொண்ட உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட கேக் ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ நேற்று (15) அதனை உல்லாச பிரயாணிகளின் பார்வைக்கு திறந்து வைத்தார்.

இந்த கேக் 111 மீட்டர் நீளம் கொண்டது. இவ்வாறான ஒரு உருளைக்கிழங்கு கேக் தயாரிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும் என இதனை தயாரித்த தலைமை சமையல்காரர் விஜயராஜ் ஜயரட்ண தெரிவிக்கின்றார்.

இதனை தயாரிக்க 100 கிலோ உருளைக்கிழங்கு, 900 முட்டைகள், 40 கிலோ கொக்கோ கிறீம், 70 கிலோ சீனி, கோதுமை மா பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான செலவு 310,000 ரூபாவாகும். 50 சமையற்காரர்கள் இதனை மூன்று நாட்கள் தயாரித்து நிறைவு செய்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ நாடாவை வெட்டி திறந்து வைப்பதையும் அருகில் நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன, கிரேன் விருந்தகத்தின் முகாமையாளர் ரிபான் ரசீன், பராமரிப்பு முகாமையாளர் எஸ்.அன்பழகன் உட்பட கலந்து கொண்டவர்களையும் இடம் பெற்ற நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

(மலையக நிருபர் தியாகு)